Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

பைல் படம்.

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 1, 2023 புதன்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புண்டு. திருமணத் தடைகள் யாவும் நீங்கி மங்கல காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு.

ரிஷபம்:

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். தைரியம் பளிச்சிடும்.

மிதுனம்:

நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும்.

கடகம்:

ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் அதிகரிக்கும். கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம்.

சிம்மம்:

புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.

கன்னி:

தடங்கல் வந்து கொண்டிருந்த நிலைமை மாறும். சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கோபமாக பேசுவதை சற்றே குறைத்து கொள்ளுங்கள். உங்கள் நன்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.

துலாம்:

மிகுந்த தன்னம்பிக்கையுடையவரான உங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். பாராட்டத்தக்க வகையில் இல்லை என்றாலும் ஒரு சில நற்பலன்கள் ஏற்படவே செய்யும். அவற்றால் மனதில் உற்சாகம் பிறக்கும்.

விருச்சிகம்:

நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தனுசு:

குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். அரைறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும்.

மகரம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.

கும்பம்:

கவனத்துடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

மீனம்:

பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள்.

Tags

Next Story