Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 28 செவ்வாய்கிழமை ராசிபலன்கள்

குரோதி - வைகாசி 15 - மே 28 - செவ்வாய்

இன்று நல்ல நேரம்: காலை 7.30 - 8.30; மாலை 4.30 - 5.30

திதி: தேய்பிறை பஞ்சமி; மாலை 3.26 பிறகு சஷ்டி

நட்சத்திரம்: உத்திராடம்; காலை 9.46 பிறகு திருவோணம்

யோகம்: சித்தயோகம் முழுவதும்

வார சூலை: வடக்கு

குளிகை: மதியம் 12.00 - 1.30

ராகு காலம்: மாலை 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9:00 - 10:30

சந்திராஷ்டமம்: ரோகிணி

சூரிய உதயம்: நாளை 5.52 அஸ்தமளம்: இன்று மாலை 6.35

திருவோண விரதம்

தினப்பலன்

மேஷம்: அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்: குடும்பம் தொடர்பான சஞ்சலங்கள் விலகும். அஸ்வினிக்கு சிறிய செலவு உண்டு. பரணிக்கு புதியவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: பலநாள் முயற்சிகள் லாபத்துடன் முடியும். நினைத்தது நிறைவேறும். கார்த்திகைக்கு உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதம்: போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் முடிவுக்கு வரும். திருவாதிரைக்கு விஐபி சந்திப்புகள் ஏற்படும். புனர்பூசத்தினர் புதிய சொத்து வாங்குவர்.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்: செலவுகள் அதிகரிக்கும். பூசத்தினர், வாழ்க்கைத் துணையால் பெரிய நன்மை அடைவர். ஆயில்யத்துக்கு ஆரோக்கிய செலவு உண்டு.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்: எதிலும் இரட்டை ஆதாயம் உண்டு. மகத்துக்கு உத்தியோக உயர்வு ஏற்படும். பூரத்தினர் வாரிசுகளால் தொழிலில் லாபம் பெறுவர்.

கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை1, 2ம் பாதம்: தடைப்பட்ட விஷயங்கள் நல்லவிதமாக முடியும். பணப்பற்றாக்குறை ஏற்படாது. அஸ்தத் தினர் குடும்பத்தில் இருந்த கவலைகள் நீங்கும்.

துலாம்: சித்திரை 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2 ,3ம் பாதம்: தொடரும் பிரச்னைகள் முடிவுக்கு வரும். சொத்துகளுக்காக உறவுகளிடம் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். சுவாதிக்கு சுபகாரியம் முடிவாகும்.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: அற்புதமான நாள். உயர்வு தரும் செய்திகள் நிறைய வரும். கேட்டைக்கு பதவி உயர்வு உண்டு. அனுஷத்துக்கு ஆன்மிக பயணம் உண்டு.

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: எல்லா முயற்சியும் தடையின்றி நிறைவேறும். கேட்டிருக்கும் பணம் வந்துவிடும். பூராடத்துக்கு உத்தியோக பிரச்னை தீர்வுக்கு வரும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்: நீண்டகால போராட்டம் முடியும். உத்திராடத்துக்கு மாற்று இனத்தவரால் உதவி கிடைக்கும். திருவோணத்துக்கு நீண்டதுார பயணம் உண்டு.

கும்பம் : அவிட்டம் 3, 4ம் பாதம் சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: சதயத்துக்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் நடக்கும். பூரட்டாதிக்கு அரசு தொடர்பான உதவிகள் நினைத்தபடியே கிடைக்கும்.

மீனம் : பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: எந்த விஷயமும் எளிதாக முடியும். உத்திரட்டாதிக்கு திடீர் செலவுகள் உண்டு. ரேவதியினர் வாரிசுகளுக்காக புதிய முயற்சியில் இறங்குவர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!