Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 24 வெள்ளிக்கிழமை ராசிபலன்கள்

இன்று

குரோதி - வைகாசி 11 - மே 24 - வெள்ளி

நல்ல நேரம்: காலை 9.30 - 10.30 மதியம் 2.00 - 3.00

திதி: தேய்பிறை பிரதமை இரவு 7.50 பிறகு துவிதியை

நட்சத்திரம்: அனுஷம் காலை 10.39 பிறகு கேட்டை

யோகம்: சித்த மரணயோகம்

வார சூலை: மேற்கு

குளிகை: காலை 7.30 - 9.00

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: ரேவதி, அஸ்வினி

சூரிய உதயம்: நாளை 5.52 அஸ்தமனம்: இன்று மாலை 6.34

தினப்பலன்

மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம்: சுபச்செய்திகள் வரும். பணவரவுக்கு பஞ்சமில்லை. அஸ்வினிக்கு பெரிய கடன் தீரும். பரணிக்கு புகழ், பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: எதிலும் குழப்பம் ஏற்படாது. உத்தியோகம் தொடர்பான பயணம் அதிகரிக்கலாம். ரோகிணிக்கு வாகன பயணத்தில் கவனம் தேவை.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதம்: நீடிக்கும் சிக்கலும் குழப்பமும் தீர்ந்து நிம்மதி உண்டாகும். மறக்க முடியாத இனிமை சம்பவம் நடக்கும். வாரிசுகளுக்கு திருமணம் முடிவாகும்.

கடகம்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்: யாருடனும் கருத்து மோதல் செய்ய வேண்டாம். பூசத்துக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆயில்யத்தினர் பிறருக்கு உதவி செய்வர்.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்: குடும்பச்சிக்கல் தீரும். மகத்தினர் சாத்தியமற்ற விஷயத்தில் இறங்க வேண்டாம். பூரத்துக்கு உறவுகளால் பணவரவு உண்டு.

கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை1, 2ம் பாதம் : அனாவசிய குறுக்கீடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சன்மானம் காத்திருக்கிறது. அஸ்தத்தினர் பிறர் விஷயத்தில் தலையிடக் கூடாது.

துலாம்: சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்: எல்லாவித குழப்பமும் நீங்கும். சுவாதிக்கு கட்டிடங்களால் நன்மை கிடைக்கும். விசாகத்துக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டு.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: முயற்சி செய்யும் விஷயத்தில் நீடிக்கும் தடைகள் நீங்கும். அனுஷத்துக்கு தீராத சிக்கல் தீரும். கேட்டைக்கு பணவரவு உண்டு.

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: புதிய பொருட்கள் சேரும். மூலத்துக்கு ஒப்பந்த கையெழுத்து விஷயத்தில் கவனம் தேவை. பூராடத்துக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ம்பாதம்: பலகால போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவி அதிகரிக்கும். பெண்களிடம் கவனமாக பேச வேண்டும்.

கும்பம் : அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: மாற்றங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிரச்னைக்கு தீர்வு உண்டு. பூரட்டாதிக்கு பெற்றோரால் ஆதாயம் கிடைக்கும்.

மீனம் : பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: பெரிய சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். உத்திரட்டாதிக்கு பழைய பாக்கிகள் வரும். ரேவதிக்கு வாகன தொல்லைகள் நீங்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!