/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 5 2024 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம்

சோபகிருது - மாசி - 22

05/03/2024. செவ்வாய்க்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - மாசி

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

திதி - அதிகாலை 03.18 am வரை நவமி பிறகு நாள் முழுவதும் தசமி

நக்ஷத்திரம்- காலை 11.40 am வரை மூலம் பிறகு பூராடம்

யோகம் - அமிர்த யோகம் 11.40 am வரை பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.30 AM-08.30 AM, 04.30 PM-05.30 PM

ராகு காலம் - 03.00 PM- 04.30 PM.

எமகண்டம் - 09.00 AM - 10.30 AM.

குளிகை - 12.00 PM - 01.30 PM.

சூரிய உதயம்- காலை 06.27 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.15 PM.

சந்திராஷ்டமம் - கிருத்திகை & ரோகிணி

இன்றைய (05-03-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

அஸ்வினி : ஏற்ற, இறக்கமான நாள்.

பரணி : லாபம் உண்டாகும்.

கிருத்திகை : போட்டிகள் மறையும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உழைப்பிற்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.

ரோகிணி : சிந்தித்து முடிவெடுக்கவும்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

மிதுன ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : மகிழ்ச்சி ஏற்படும்.

கடக ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு செய்வதற்கான ஆலோசனை கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

புனர்பூசம் : பொறுமை வேண்டும்.

பூசம் : வாய்ப்பு உண்டாகும்.

ஆயில்யம் : ஆலோசனை கிடைக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். இழுபறியான சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.

பூரம் : பொறுப்பான நாள்.

உத்திரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.

சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். உழைப்புக்குண்டான அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

சித்திரை : திருப்தியான நாள்.

சுவாதி : ஆர்வம் ஏற்படும்.

விசாகம் : பொறுமை வேண்டும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மறதி சார்ந்த பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும். தடை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : பிரச்சனைகள் தீரும்.

அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும்.

கேட்டை : ஆலோசனை வேண்டும்.

தனுசு ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்கள் பொருட்களின் மீது ஈர்ப்பு ஏற்படும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

மூலம் : அனுபவம் ஏற்படும்.

பூராடம் : பொறுமை வேண்டும்.

உத்திராடம் : ஈர்ப்பு ஏற்படும்.

மகர ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமின் சார்ந்த செயல்களை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : உபாதைகள் மறையும்.

திருவோணம் : அலைச்சல் ஏற்படும்.

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.

கும்ப ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவினர்களின் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.

சதயம் : குழப்பம் விலகும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.

மீன ராசிக்கான பலன்கள் மார்ச் 5, 2024

உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். உதவி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

ரேவதி : மேன்மை ஏற்படும்.

Updated On: 5 March 2024 3:58 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!