Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 26 2024 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

பஞ்சாங்கம் - சோபகிருது - பங்குனி- 13

26/03/2024 செவ்வாய்க்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - பங்குனி .

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

திதி - பிற்பகல் 03.06 pm வரை பிரதமை பிறகு துவிதியை

நக்ஷத்திரம்- பிற்பகல்.01 .42 pm வரை ஹஸ்தம் பிறகு சித்திரை

யோகம் - நாள்முழுவதும் சித்த யோகம் *

நல்ல நேரம் - 07.30 AM-08.30 AM, 04.30 PM-05.30 PM

கௌரி நல்ல நேரம் 10.30 AM-11.30 AM, 07.30 PM -08.30 PM

ராகு காலம் - 03.00 PM- 04.30 PM.

எமகண்டம் - 09.00 AM -10.30 AM.

குளிகை - 12.00 PM - 01.30 PM.

சூரிய உதயம்- காலை 06.09 AM.

சூரிய அஸ்தமனம்- மாலை 06.20 PM.

சந்திராஷ்டமம்- அவிட்டம் & சதயம்

இன்றைய 26-03-2024 ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

சவாலான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.

பரணி : உதவி கிடைக்கும்.

கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

புதிய திட்டங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். தவறிய சில பொருட்களை பற்றிய குறிப்புகள் கிடைக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : அறிமுகம் உண்டாகும்.

ரோகிணி : இலக்குகள் பிறக்கும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சந்தேக உணர்வுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தடைபட்ட பணிகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். திருப்தியற்ற மனநிலை குறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.

கடக ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

திட்டமிட்ட பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூசம் : வெற்றிகரமான நாள்.

ஆயில்யம் : தைரியம் மேம்படும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கலகலப்பான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். வழக்குகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

பூரம் : மதிப்பு கிடைக்கும்

உத்திரம் : அனுபவம் உண்டாகும்.

கன்னி ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் வழியில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். திடீர் முடிவுகளை தவிர்க்கவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் முன்னேற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : சங்கடங்கள் மறையும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.

சுவாதி : முடிவு பிறக்கும்.

விசாகம் : திருப்பங்கள் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் உள்ள தடைகளை அறிவீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆதாயம் ஏற்படும்.

அனுஷம் : தடைகளை அறிவீர்கள்.

கேட்டை : சோர்வுகள் குறையும்.

தனுசு ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக திறமை மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மூலம் : முன்னேற்றமான நாள்.

பூராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

உத்திராடம் : பயணங்கள் ஏற்படும்.

மகர ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

உயர் பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : நன்மையான நாள்.

திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.

அவிட்டம் : ஆதாயகரமான நாள்.

கும்ப ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

தற்பெருமை சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். எதிலும் திருப்தியின்மையான சூழல் அமையும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

அவிட்டம் : அலைச்சல் அதிகரிக்கும்.

சதயம் : திருப்தியின்மையான நாள்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

மீன ராசிக்கான பலன்கள் மார்ச் 26, 2024

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளியூர் வர்த்தகத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும். ஆபரண பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்புகளால் மனதில் மாற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : ஈர்ப்பு ஏற்படும்.

ரேவதி : மாற்றம் உண்டாகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!