Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
ராசிபலன் (கோப்பு படம்)
பஞ்சாங்கம்: - மாசி :- 30 13- 03- 2024 புதன்கிழமை.
வருடம்: ஸ்ரீ சோபகிருது:-
அயனம்:- உத்தராயணம்.
ருது:- சிசிர - ருதௌ.
மாதம்:- மாசி
பக்ஷம்:- சுக்ல -பக்ஷம் வளர்- பிறை.
திதி: - திருதியை காலை: 08.53 வரை, பின்பு சதுர்த்தி.
நக்ஷத்திரம்:- ரேவதி:- அதிகாலை: 12.35 வரை, பின்பு அஸ்வினி, இரவு: 11.20 வரை , பிறகு பரணி.
அமிர்தாதி- யோகம்: காலை: 06.22 வரை சித்தயோகம், பின்பு இரவு: 11.20. யோகம் சரியில்லை, பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:- காலை: - 09.30 - 10.30 PM. மாலை: - 04.30 - 05.30 PM.
கௌரி- நல்ல காலை: 10.30 - 11.30 PM. இரவு : 07.30 - 08.30 PM.
ராகு காலம்: பிற்பகல்: - 12.00 - 01.30 PM .
எமகண்டம்: காலை: 07.30 - 09.00 AM.
குளிகை: காலை: - 10.30 - 12.00. PM.
சந்திராஷ்டம நட்சத்திரம்: மகம், - பூரம்.
மாசி: 30. புதன்கிழமை 13 - 03- 2024 ராசிபலன்கள்
மேஷ ராசி:
பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
அஸ்வினி : சோர்வுகள் உண்டாகும்.
பரணி : பொறுப்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : லாபம் கிடைக்கும்.
ரிஷப ராசி:
குழந்தைகளை அரவணைத்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான அசதிகள் தோன்றி மறையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
கிருத்திகை : அசதிகள் மறையும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
மிதுன ராசி:
பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சொத்து விற்பனையில் லாபம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
திருவாதிரை : ஆதாயகரமான நாள்.
புனர்பூசம் : லாபம் ஏற்படும்.
கடக ராசி:
ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்பாராத பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்.
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : நெருக்கடிகள் குறையும்.
சிம்ம ராசி:
எதிர்பாராத தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். ஆய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : புரிதல் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆதரவான நாள்.
கன்னி ராசி:
குடும்பத்தில் பொறுப்பு மேம்படும். பல பணிகளை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
உத்திரம் : பொறுப்பு மேம்படும்.
அஸ்தம் : குழப்பங்கள் உண்டாகும்.
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
துலாம் ராசி:
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.
சித்திரை : சந்திப்பு உண்டாகும்.
சுவாதி : தெளிவு ஏற்படும்.
விசாகம் : சஞ்சலங்கள் விலகும்.
விருச்சிக ராசி
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
விசாகம் : தடைகள் விலகும்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : லாபம் மேம்படும்.
தனுசு ராசி
குடும்ப வருமானம் குறித்த சிந்தனை ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணம் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல் ஏற்படும். சமூகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
மூலம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பூராடம் : அலைச்சல் ஏற்படும்.
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
மகர ராசி
மனை மீதான கடன் உதவி கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். உறவினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பயணங்கள் ஈடேறும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தி உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
உத்திராடம் : உதவி கிடைக்கும்.
திருவோணம் : பயணங்கள் ஈடேறும்.
அவிட்டம் : திருப்தி உண்டாகும்.
கும்ப ராசி
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளில் தெளிவு ஏற்படும். மனதில் இடமாற்றம் குறித்த எண்ணம் அதிகரிக்கும். தனவருவாயில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சோர்வு விலகும் நாள்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
அவிட்டம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
சதயம் : தெளிவு ஏற்படும்.
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
மீன ராசி
நண்பர்களுக்கிடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
ரேவதி : மதிப்பு மேம்படும்.
Tags
- Horoscope Today
- Today Horoscope
- இன்றைய ராசிபலன்
- Today Horoscope March 13 2024
- Today Horoscope in Tamil
- Today Horoscope in Tamil for Aries
- Today Horoscope in Tamil for Taurus
- Today Horoscope in Tamil for Gemini
- Today Horoscope in Tamil for Cancer
- Today Horoscope in Tamil for Leo
- Today Horoscope in Tamil for Virgo
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu