Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய ஜூன் 6 வியாழக்கிழமை ராசிபலன்கள்

பஞ்சாங்கம் - குரோதி வருடம்- வைகாசி - 24-

06/06/2024 வியாழக்கிழமை.

வருடம் - குரோதி வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - வஸந்த ருதௌ.

மாதம் - வைகாசி

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - மாலை 06.40 pm வரை அமாவாசை திதி பிறகு பிரதமை திதி

நக்ஷத்திரம் - இரவு 09.00 pm வரை ரோகிணி பிறகு மிருகஷீரிஷம்

யோகம் - அதிகாலை 05.51 am வரை சித்த யோகம் பிறகு நாள் முழுவதும் மரண யோகம்

நல்ல நேரம் - 10.30 AM - 11.30 AM

கௌரி நல்ல நேரம் 11.30 AM-12.00 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 01.30 PM- 03.00 PM .

எமகண்டம் - 06.00 AM- 07.30 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம். - காலை 05.42 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.34 PM.

சந்திராஷ்டமம் - சுவாதி. &. விசாகம்


இன்றைய (06-06-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தெளிவுகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : செல்வாக்கு உயரும்.

பரணி : மதிப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வேலையாட்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத்துறையில் முயற்சிகள் சாதகமாக அமையும். பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : நுட்பங்களை அறிவீர்கள்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

குழந்தைகளின் செயல்களில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். இனம் புரியாத சில எண்ணங்களின் மூலம் தடுமாற்றம் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.

புனர்பூசம் : தடுமாற்றம் உண்டாகும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். வாகனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூசம் : பழுதுகள் நீங்கும்.

ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சோர்வுகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : அபிவிருத்தியான நாள்.

பூரம் : ஆதரவுகள் கிடைக்கும்.

உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். தாயாரின் உடல் நிலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். தேவைக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். தம்பதிகளுக்கு புரிதல் ஏற்படும். கல்வியில் புதிய தேடல் உண்டாகும். வெளிநாடு செல்வது தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : மாற்றமான நாள்.

சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

முக்கியமான விஷயங்களில் பொறுமை காக்கவும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். சுப காரியம் தொடர்பான செயல்களில் அலைச்சல் அதிகரிக்கும். நினைத்த சில பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பொறுமை காக்கவும்.

சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விசாகம் : சோர்வுகள் ஏற்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வருமான வாய்ப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். முயற்சிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.

அனுஷம் : சாதகமான நாள்.

கேட்டை : வாய்ப்புகள் சாதகமாகும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். பழைய கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூராடம் : வருமானம் உயரும்.

உத்திராடம் : மதிப்பு மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

ஆதாரமற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இணையதள பயன்பாடு கல்வியில் அதிகரிக்கும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : பேச்சுக்களை குறைக்கவும்.

திருவோணம் : ஆர்வம் மேம்படும்.

அவிட்டம் : தடைகள் விலகும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

துணைவரிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பிரச்சனைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

சதயம் : மாற்றம் ஏற்படும்.

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 6, 2024

விருப்பத்திற்கு ஏற்ப வீடு அமையும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். தாய் வழி உறவுகளால் ஆறுதல் ஏற்படும். குழந்தைகளின் ஒத்துழைப்பு மேம்படும். காலம் தவறாமல் உணவு உட்கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : தொடர்புகள் விரிவடையும்.

உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.

ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

Tags

Next Story