Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய ஜூன் 5 புதன்கிழமை ராசிபலன்கள்

பஞ்சாங்கம் - குரோதி வருடம்- வைகாசி - 23

05/06/2024 புதன்கிழமை.

வருடம் - குரோதி வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - வஸந்த ருதௌ.

மாதம் - வைகாசி

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - இரவு 07.55 pm வரை சதுர்த்தசி திதி பிறகு அமாவாசை திதி

நக்ஷத்திரம் - இரவு 09.28 pm வரை கிருத்திகை பிறகு ரோகிணி

யோகம் - அதிகாலை 05.51 am வரை சித்த யோகம் இரவு 09.28 PM வரை அமிர்த யோகம் பிறகு சித்த யோகம்

நல்ல நேரம் - 11.30 AM - 12.00 AM 04.30 PM - 05.30 PM

கௌரி நல்ல நேரம் 01.30 AM-02.30 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 12.00 PM- 01.30 PM .

எமகண்டம் - 07.30 AM- 09.00 AM.

குளிகை - 10.30 AM - 12.00 PM.

சூரிய உதயம். - காலை 05.42 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.34 PM.

சந்திராஷ்டமம் - சித்திரை &. சுவாதி


இன்றைய (05-06-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும். உடல் நிலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

அஸ்வினி : இழுபறிகள் மறையும்.

பரணி : ஏற்ற, இறக்கமான நாள்.

கிருத்திகை : செல்வாக்கு உயரும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். அலுவலகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். சில விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும். புதிய விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : மாற்றமான நாள்.

ரோகிணி : பயணங்கள் சாதகமாகும்.

மிருகசீரிஷம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மறைமுகமான சில தடைகள் மூலம் தாமதம் உண்டாகும். நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.

புனர்பூசம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். பணியிடங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : தடைகள் விலகும்.

பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆயில்யம் : தேடல்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். முயற்சிக்கு உண்டான லாபம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் சாதகமாக அமையும். பாடங்களில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய தன்னம்பிக்கை மனதில் உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : லாபகரமான நாள்.

பூரம் : குழப்பங்கள் விலகும்.

உத்திரம் : மதிப்புகள் மேம்படும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வெளியூர் சார்ந்த வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆன்மிக பணிகளில் நாட்டம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.

சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

மனதளவில் சில தெளிவுகள் ஏற்படும். விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிலும் பொறுமை வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : தெளிவுகள் ஏற்படும்.

சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

விசாகம் : பொறுமை வேண்டும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

நினைத்த காரியங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரப் போட்டிகள் சற்று குறையும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தெளிவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.

கேட்டை : தடைகள் விலகும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழுபறியாக இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : வரவுகள் கிடைக்கும்.

பூராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

உத்திராடம் : முன்னேற்றம் கிடைக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

நினைத்த செயல்களில் பொறுமை வேண்டும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாக அமையும். பழைய விவகாரங்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்களில் சிறு சிறு தடைகள் தோன்றி மறையும். இனம் புரியாத சிந்தனைகளால் மனதில் சோர்வு ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பொறுமை வேண்டும்.

திருவோணம் : மாற்றம் உண்டாகும்.

அவிட்டம் : சோர்வான நாள்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

வருமான உயர்விற்கான சூழல் அமையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். பணி விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அவிட்டம் : உயர்வான நாள்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 5, 2024

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும். தொழில் சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மறையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்

பூரட்டாதி : காரியங்கள் நிறைவேறும்.

உத்திரட்டாதி : பயணங்களில் விவேகம்

ரேவதி : நெருக்கடிகள் மறையும்.

Tags

Next Story
நாமக்கல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் - மூத்த பணியாளர்களின் நலனுக்கான அரசின் முயற்சி