Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

30 ஜூன் 2023 ஞாயிற்றுக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம்-ஆனி மாதம் - 16

30-06-2024 ஞாயிற்றுக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - உத்தராயணம்

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆனி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - பிற்பகல் 01.35 pm வரை நவமி திதி பிறகு தசமி திதி

நக்ஷத்திரம் - காலை 09.10 am வரை ரேவதி பிறகு அஸ்வினி

யோகம் - அதிகாலை 05.55 am வரை மரண யோகம் பிறகு காலை 09.10 am வரை அமிர்த யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 03.15 PM - 04.15 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 01.30 PM-02.30 PM

ராகு காலம் - 04.30 PM- 06.00 APM .

எமகண்டம் - 12.00 PM- 01.30 PM.

குளிகை - 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம். காலை 05.46 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.39 PM.

சந்திராஷ்டமம் - பூரம் & உத்திரம்

இன்றைய (30-06-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். கலைத்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாடங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்புகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். மறைமுகமான வதந்திகள் தோன்றி மறையும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அஸ்வினி : கோபமின்றி செயல்படவும்.

பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : வதந்திகள் மறையும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். ஜாமீன் செயல்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றி மறையும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மேல்நிலை கல்வி பாடங்களில் குழப்பமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்

கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.

ரோகிணி : எதிர்ப்புகள் மறையும்.

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

உயர்கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு உயரும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சில வரவுகள் மூலம் கையிருப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : மதிப்பு உயரும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பணி நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வேலையாட்கள் மாற்ற செயல்களில் பொறுமை வேண்டும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : ஈடுபாடு உண்டாகும்.

பூசம் : நம்பிக்கை மேம்படும்.

ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். முயற்சிக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான சூழல் உண்டாகும். வேலையாட்களின் செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

மகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். விருப்பமில்லாமல் மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மறைமுகமான சில விமர்சனங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெண்மை நிறம்

உத்திரம் : உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும்.

அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.

சித்திரை : விமர்சனங்கள் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மதிப்பு உயரும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் புரிதல் மேம்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சுவாதி : மதிப்புகள் உயரும்.

விசாகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். உத்தியோகத்தில் புதுமையான சூழல் உண்டாகும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

அனுஷம் : ஆர்வமின்மை விலகும்.

கேட்டை : சாதகமான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தந்தை இடத்தில் விவாதம் செய்வதை குறைத்துக் கொள்ளவும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபார விஷயங்களில் கனிவுடன் செயல்படவும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.

பூராடம் : புரிதல்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் : உற்சாகம் பிறக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்கு உண்டான புதிய வேலைகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.

திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.

அவிட்டம் : மதிப்புகள் கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். அனுபவம் நிறைந்த வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் தைரியம் பிறக்கும். உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : ஆதரவான நாள்.

சதயம் : மாற்றங்கள் ஏற்படும்.

பூரட்டாதி : தைரியம் பிறக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 30, 2024

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு மேம்படும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் விலகும்.

உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!