Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய ஜூன் 3 திங்கள்கிழமை ராசிபலன்கள்

பஞ்சாங்கம் - குரோதி வருடம்- வைகாசி - 21-

03/06/2024 திங்கட்கிழமை.

வருடம் - குரோதி வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - வஸந்த ருதௌ.

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - அதிகாலை 01.41 AM. வரை ஏகாதசி இரவு 11.31 pm வரை துவாதசி பிறகு திரையோதசி

நக்ஷத்திரம் - அதிகாலை 12.52 am வரை ரேவதி இரவு 11.29 pm வரை அஸ்வினி பிறகு பரணி

யோகம் - அதிகாலை 12.52 am வரை அமிர்த யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 06.30 AM - 07.30 AM, 04.30 PM - 05.30 PM

கௌரி நல்ல நேரம் 09.30 AM-10.30 AM, 07.30 PM-08.30 PM

ராகு காலம் - 07.30 AM- 09.00 AM .

எமகண்டம் - 10.30 AM- 12.00 PM.

குளிகை - 01.30 PM - 03.00 PM.

சூரிய உதயம். - காலை 05.41 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.33 PM.

சந்திராஷ்ட்டமம் - மகம் & பூரம்

இன்றைய (03-06-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செயல்படவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். சஞ்சலமான உணர்வுகளால் மனதில் பலதரப்பட்ட குழப்பம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : புரிதல்கள் ஏற்படும்.

பரணி : தெளிவுகள் பிறக்கும்.

கிருத்திகை : குழப்பமான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுப காரிய தடைகள் விலகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.

ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : தடைகள் விலகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டாளிகளின் வழியில் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட சில கடன் பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளின் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

உறவுகளின் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்பு குறையும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

பூசம் : லாபகரமான நாள்.

ஆயில்யம் : கையிருப்புகள் குறையும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய நபர்களால் சில மாற்றமான தருணம் ஏற்படும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : புரிதல்கள் அதிகரிக்கும்.

பூரம் : மாற்றமான நாள்.

உத்திரம் : அனுபவங்கள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணி நிமித்தமான விஷயங்களை பகிராமல் இருக்கவும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். ஆர்வமின்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

உத்திரம் : குழப்பமான நாள்.

அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.

சித்திரை : அலச்சல் ஏற்படும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முகத்தில் இருந்துவந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டாரம் விரிவடையும். உடல்நலம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : கவலைகள் விலகும்.

சுவாதி : நட்புகள் விரிவடையும்.

விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : ஈடுபாடு உண்டாகும்.

அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.

கேட்டை : அனுகூலமான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் கையிருப்பு குறையும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். தடங்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : கையிருப்புகள் குறையும்.

பூராடம் : பயணங்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் : மேன்மையான நாள்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

வியாபார ரீதியாக புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சாதனை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திராடம் : அனுபவம் ஏற்படும்.

திருவோணம் : மந்தமான நாள்.

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் மேம்படும். தொழில் சார்ந்த ஆலோசனைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

அவிட்டம் : ஆதரவான நாள்.

சதயம் : ஆர்வம் பிறக்கும்.

பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 3, 2024

கருத்துகளுக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். வெளிப் பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : மதிப்பு கிடைக்கும்.

உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

ரேவதி : மாற்றம் ஏற்படும்.

Tags

Next Story