Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய ஜூன் 2 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்கள்

பஞ்சாங்கம் -

குரோதி வருடம்-வைகாசி - 20

02/06/2024 ஞாயிற்றுக்கிழமை.

வருடம் - குரோதி வருடம். .

அயனம் - உத்தராயணம் .

ருது - வஸந்த ருதௌ.

மாதம் - வைகாசி

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - அதிகாலை 03.25 AM. வரை தசமி திதி பிறகு ஏகாதசி திதி

நக்ஷத்திரம் - அதிகாலை 02.26 am வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி

யோகம் - அதிகாலை 02.26 am வரை சித்த யோகம் அதிகாலை 05.51 am வரை மரண யோகம் பிறகு நாள் முழுவதும் அமிர்த யோகம்

நல்ல நேரம் - 07.30 AM - 08.30 AM, 03.30 PM - 04.30 PM

கௌரி நல்ல நேரம் 10.30 AM-11.30 AM, 01.30 PM-02.30 PM

ராகு காலம் - 04.30 PM- 06.00 PM .

எமகண்டம் - 12.00 PM- 01.30 PM.

குளிகை - 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம். - காலை 05.41 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.33 PM.

சந்திராஷ்ட்டமம் - ஆயில்யம் & மகம்

இன்றைய (02-06-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். செயல்பாடுகளில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். தடைபட்டு வந்த ஒப்பந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பரணி : தடைகள் மறையும்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

நீண்ட நாட்களாக நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் பிறக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.

ரோகிணி : லாபம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். சமூகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும்.

திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.

புனர்பூசம் : லாபம் மேம்படும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் அகலும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஈடுபாடு மேம்படும்.

பூசம் : குழப்பங்கள் அகலும்.

ஆயில்யம் : தேடல்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். எதிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : பொறுமையுடன் செயல்படவும்.

பூரம் : நிதானத்துடன் செயல்படவும்.

உத்திரம் : சேமிப்புகள் குறையும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். தனவரவுகள் திருப்தியாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.

அஸ்தம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

சித்திரை : குழப்பங்கள் குறையும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

திடீர் தனவரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சுப காரியங்களை முன்நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விசாகம் : ஆதாயம் ஏற்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.

அனுஷம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : அனுபவம் உண்டாகும்.

பூராடம் : மாற்றம் உண்டாகும்.

உத்திராடம் : ஆர்வமின்மை குறையும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதையும் செய்துமுடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சிறு மற்றும் குறு வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். உறுதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : தடைகள் விலகும்.

திருவோணம் : மாற்றம் உண்டாகும்.

அவிட்டம் : ஆதரவான நாள்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

குழந்தைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : முயற்சிகளை ஆதரிப்பீர்கள்.

சதயம் : துரிதம் உண்டாகும்.

பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 2, 2024

தொழில் சார்ந்த முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

ரேவதி : நெருக்கடியான நாள்.

Tags

Next Story