Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

17 ஜூன் 2023 திங்கள்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - க்ரோதி வருடம்- ஆனி - 03

17-06-2024 திங்கட்கிழமை.

வருடம் - க்ரோதி வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆனி

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - அதிகாலை 04.28 am வரை தசமி பிறகு ஏகாதசி திதி

நக்ஷத்திரம் - பிற்பகல் 01.48 pm வரை சித்திரை பிறகு சுவாதி

யோகம் - பிற்பகல் 01.48 pm வரை சித்த யோகம் பிறகு அமிர்த யோகம்

நல்ல நேரம் - 06.30 AM - 07.30 AM, 03.30 PM - 04.30 PM

கௌரி நல்ல நேரம் 09.30 AM-10.30 AM, 07.30 PM-08.30 PM

ராகு காலம் - 07.30 AM- 09.00 AM .

எமகண்டம் - 10.30 AM- 12.00 AM.

குளிகை - 01.30 PM - 03.00 PM.

சூரிய உதயம். - காலை 05.43 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.37 PM.

சந்திராஷ்டமம் -

பூரட்டாதி & உத்திரட்டாதி

இன்றைய (17-06-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

அஸ்வினி : உற்சாகமான நாள்.

பரணி : குழப்பங்கள் நீங்கும்.

கிருத்திகை : மதிப்புகள் உயரும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். இழுபறியான பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் கிடைக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தொட்ட காரியங்கள் சாதகமாக முடியும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : வரவுகள் கிடைக்கும்.

ரோகிணி : தாமதங்கள் மறையும்.

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மேல்நிலைக் கல்வி குறித்த எண்ணங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில மாற்றமான சூழல் அமையும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவாதிரை : புரிதல்கள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : மாற்றமான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கெளரவ பொறுப்புகள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் உதிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அசதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஆர்வமின்மை குறையும்.

பூசம் : ஆசிகள் கிடைக்கும்.

ஆயில்யம் : மந்தமான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழ்நிலை அமையும். நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். எழுத்து துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.

அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.

சித்திரை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வாக்குறுதி அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்களை முடிப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : தடுமாற்றம் ஏற்படும்.

சுவாதி : விமர்சனங்களை தவிர்க்கவும்.

விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது விவேகம் வேண்டும். சக ஊழியர்களால் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : சங்கடங்கள் மறையும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த முயற்சி நிறைவேறும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகைகளில் ஆதாயம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மூலம் : ஆதாயம் உண்டாகும்.

பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.

உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராதவிதமாக திடீர் பண வரவு ஏற்படும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய முயற்சிகளில் சில அனுபவங்கள் கிடைக்கும். பரிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவோணம் : லாபகரமான நாள்.

அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் கவனம் வேண்டும். தடைபட்ட பணிகள் சுமூகமாக முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் இருந்துவந்த வருத்தம் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சதயம் : வருத்தங்கள் குறையும்.

பூரட்டாதி : நினைத்ததை முடிப்பீர்கள்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 17, 2024

எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். இழுபறியான சில பணிகளை முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவது நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆர்வமின்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பதற்றமின்றி செயல்படவும்.

உத்திரட்டாதி : சோர்வான நாள்.

ரேவதி : மாற்றம் பிறக்கும்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது