Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

13 ஜூன் 2023 வியாழக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம்- வைகாசி - 31

13/06/2024 வியாழக்கிழமை.

வருடம் - குரோதி வருடம். .

அயனம் - உத்தராயணம் .

ருது - வஸந்த ருது.

மாதம் - வைகாசி

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - ஸப்தமி திதி இரவு 10.44 pm வரை பிறகு அஷ்டமி திதி

நக்ஷத்திரம் - அதிகாலை 03.51 am வரை மகம் பிறகு பூரம்

யோகம் - அதிகாலை 03.51 am வரை சித்த யோகம் அதிகாலை 05.51am வரை அமிர்த யோகம் பிறகு சித்த யோகம்

நல்ல நேரம் - 10.30 AM - 11.30 AM

கௌரி நல்ல நேரம் 11.30 AM-12.00 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 01.30 PM- 03.00 PM .

எமகண்டம் - 06.00 AM- 07.30 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம். - காலை 05.42 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.36 PM.

சந்திராஷ்டமம் - திருவோணம்

இன்றைய (13-06-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிக்கமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்கள் சாதகமாக அமையும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். குடும்ப நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்.

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : பயணங்கள் சாதகமாகும்.

கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், பதவிகளும் சிலருக்கு கிடைக்கும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : முடிவுகள் சாதகமாகும்.

ரோகிணி : நினைவாற்றல் மேம்படும்.

மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நற்சொல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.

புனர்பூசம் : ஆதரவான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

மனதில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பலவிதமான குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பொன், பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

உறவினர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மகம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

பூரம் : குழப்பமான நாள்.

உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உழைப்புக்கு உண்டான உயர்வு தாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அஸ்தம் : குறைத்துக் கொள்ளவும்.

சித்திரை : ஆதரவான நாள்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் முன்னேற்றத்திற்கான வழிகளை சிந்திப்பீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான விஷயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

சுவாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

விசாகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரசனை தன்மையில் மாற்றம் உண்டாகும். மதிப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

அனுஷம் : புதுமையான நாள்.

கேட்டை : மாற்றம் உண்டாகும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணி நிமித்தமான ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

பூராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

உத்திராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

சமூக வட்டார அமைப்புகளின் மூலம் மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். நிர்வாகத் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். மக்கள் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

உத்திராடம் : சஞ்சலங்கள் மறையும்.

திருவோணம் : மாற்றமான நாள்.

அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பரந்த மனப்பான்மை மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். சிக்கலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

சதயம் : அறிமுகம் கிடைக்கும்.

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 13, 2024

சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதயமான சூழ்நிலை ஏற்படும். அரசு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

பூரட்டாதி : பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.

ரேவதி : ஆதாயம் ஏற்படும்.

Tags

Next Story
நாமகிரிப்பேட்டையில் பெண் ஐ.டி ஊழியர் மீது தாக்குதல் - குற்றவாளி கைது