Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய ஜூன் 1 சனிக்கிழமை ராசிபலன்கள்

பஞ்சாங்கம்: -

வைகாசி: 𝟭𝟗 :- 𝟬𝟭• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰, சனிக்கிழமை.

வருடம்:- ஸ்ரீ குரோதி:

அயனம்:- உத்தராயணம்.

ருது:- வஸந்த - ருதெள.

மாதம்; - வைகாசி:-

பக்ஷம்:- கிருஷ்ண -பக்ஷம்: 🌙 தேய் -பிறை.

திதி:- நவமி:- காலை: 06.28 வரை, பின்பு தசமி.

நக்ஷத்திரம்:- பூரட்டாதி:- அதிகாலை: 04.03 வரை பின்பு உத்திரட்டாதி.

அமிர்தாதி- யோகம்:- இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை: - 07.30 - 08.30 AM. மாலை: - 04.30 - 05.30 PM.

கௌரி நல்ல நேரம்: காலை:- 10.30 - 11.30 PM. இரவு :- 09.30 - 10.30 PM.

ராகு- காலம்: காலை: - 09.00 - 10.30 AM.

எமகண்டம்: பிற்பகல்: - 01.30 - 03.00 PM.

குளிகை: காலை: - 06.00 - 07.30 AM.

( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்: காலை: 05.52. AM.

சூரிய- அஸ்தமனம்: மாலை: 06.28. PM.

சந்திராஷ்டம - நட்சத்திரம்: பூசம்.

01/06/2024 ராசி- பலன்கள்

மேஷம் -ராசி:

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவு, செலவில் விவேகத்துடன் செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம் ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : சாமர்த்தியம் பிறக்கும்.

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.

மிதுனம் -ராசி:

அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர் பொருட்களின் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

மிருகசீரிஷம் : ஆதாயம் அடைவீர்கள்.

திருவாதிரை : அதிர்ஷ்டகரமான நாள்.

புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.

கடகம் -ராசி:

முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். புதிய தொழில்நுட்ப தேடல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.

பூசம் : தேடல் உண்டாகும்.

ஆயில்யம் : அனுபவம் ஏற்படும்.

சிம்மம் -ராசி:

மனதளவில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். உடன் பிறப்புகளால் அலைச்சல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. மறைமுகமான பேச்சுக்களால் சில மாற்றங்கள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

மகம் : சோர்வான நாள்.

பூரம் : குழப்பம் மறையும்.

உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.

கன்னி -ராசி:

மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். சகோதரர்களின் வழியில் உதவிகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த வேலை திடீரென முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

உத்திரம் : தயக்கங்கள் குறையும்.

அஸ்தம் : முடிவுகள் கிடைக்கும்.

சித்திரை : தடைகள் விலகும்.


துலாம் -ராசி:

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதை உருத்திய சில கவலைகள் மறையும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழல் உண்டாகும். உறுதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் : சாதகமான நாள்.

விருச்சிகம்- ராசி:

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பெரியோர்களின் ஆதரவு நன்மையை தரும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். ஈகை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

விசாகம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.

அனுஷம் : ஒத்துழைப்பான நாள்.

கேட்டை : பொறுமை வேண்டும்.

தனுசு -ராசி:

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய வேலைக்கான உதவிகள் கிடைக்கும். புதிய மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் அமையும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

பூராடம் : அபிவிருத்தியான நாள்.

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.

மகரம் -ராசி:

பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். தனித்தன்மைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். வியாபார பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

உத்திராடம் : அனுகூலமான நாள்.

திருவோணம் : பொறுமை வேண்டும்.

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.

கும்பம் -ராசி.

எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். தோற்றப் பொலிவில் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். இறை பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபார விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.

சதயம் : தெளிவுகள் ஏற்படும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம் -ராசி:

பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். சில விஷயங்களில் அனுபவம் வெளிப்படும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். குழந்தைகளின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். உறவினர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

பூரட்டாதி : சோர்வான நாள்.

உத்திரட்டாதி : இழுபறியான நாள்.

ரேவதி : குழப்பம் அதிகரிக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!