Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

7 ஜூலை 2024 ஞாயிற்றுக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆனி மாதம் - 23

07-07-2024 ஞாயிற்றுக்கிழமை

வருடம் -குரோதி வருடம்

அயனம் - உத்தராயணம்

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆனி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - அதிகாலை 05.06 am வரை பிரதமை திதி பிறகு துவிதியை திதி

நக்ஷத்திரம் - அதிகாலை 05.52 am வரை புனர்பூசம் பிறகு பூசம்

யோகம் - நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 01.45 PM - 02.45 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 01.30 PM-02.30 PM

ராகு காலம் - 04.30 PM- 06.00 PM .

எமகண்டம் - 12.00 PM- 01.30 PM.

குளிகை - 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம். -காலை 05.48 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.40 PM.

சந்திராஷ்டமம் - கேட்டை & மூலம்

இன்றைய (07-07-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் அனுகூலமாக செயல்படுவார்கள். பணி நிமித்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் முன்யோசனையின்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அஸ்வினி : லாபங்கள் கிடைக்கும்.

பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனை தொடர்பான பணிகளில் சில விரயம் ஏற்பட்டு நீங்கும். எழுத்து தொடர்பான பணிகளில் கற்பனைகள் அதிகரிக்கும். சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

கிருத்திகை : நம்பிக்கை உண்டாகும்.

ரோகிணி : விரயம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிந்தித்துச் செயல்படவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கொள்கை தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவாதிரை : சோர்வுகள் நீங்கும்.

புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். கருத்துகளை பகிர்வதில் கவனம் வேண்டும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் கோபமின்றி செயல்படவும். வியாபார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளால் சஞ்சலங்கள் ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.

பூரம் : குழப்பங்கள் பிறக்கும்.

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

தகவல் தொடர்பு துறைகளில் முனேற்றமான வாய்ப்புகள் அமையும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் மூலம் புரிதல் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : முனேற்றமான நாள்.

அஸ்தம் : மேன்மை ஏற்படும்.

சித்திரை : புரிதல் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

திறமைகளை வெளிப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுமையான சூழல் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

சுவாதி : பிரச்சனைகள் குறையும்.

விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். பெற்றோரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகளை எடுப்பீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : தேடல்கள் உண்டாகும்.

அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.

கேட்டை : முன்னேற்றமான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்த்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

மூலம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

பூராடம் : வாதங்களை குறைக்கவும்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் உபரி வருமானம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிப்படுத்தும் கருத்துகளில் கவனம் வேண்டும். தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : விரயங்கள் ஏற்படும்.

திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வாழ்க்கை துணை வழியில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறையும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். சிக்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

அவிட்டம் : மாற்றமான நாள்.

சதயம் : சுறுசுறுப்பான நாள்.

பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 7, 2024

குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சமூகப் பணிகளின் மூலம் ஆதரவு மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்திரட்டாதி : புரிதல்கள் மேம்படும்.

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

Tags

Next Story