Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

5 ஜூலை 2024 வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம்-ஆனி மாதம் - 21

05-07-2024 வெள்ளிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - உத்தராயணம்

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆனி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - காலை 04.55 am வரை சதுர்த்தசி திதி பிறகு அமாவாசை திதி

நக்ஷத்திரம் - அதிகாலை 04.35 am வரை மிருகஷிரிஷம் பிறகு திருவாதிரை

யோகம் - அதிகாலை 05.57am வரை மரண யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 09.15 AM - 10.15 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 12.00 AM-01.00 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 10.30 AM- 12.00 PM .

எமகண்டம் - 03.00 PM- 04.30 PM.

குளிகை - 07.30 AM - 09.00 AM.

சூரிய உதயம். - காலை 05.47 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.40 PM.

சந்திராஷ்டமம் - விசாகம் &அனுஷம்

இன்றைய (05-07-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : ஆதரவான நாள்.

பரணி : தீர்வுகள் கிடைக்கும்.

கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

கிருத்திகை : கலகலப்பான நாள்.

ரோகிணி : வரவுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

சில விஷயங்களில் அனுபவம் வெளிப்படும். பணியாளர்களிடத்தில் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் புதுவிதமான சூழல் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.

திருவாதிரை : புதுமையான நாள்.

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் வியாபாரத்தில் நன்மையை தரும். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். செய் தொழிலில் முயற்சிகேற்ப லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

பூசம் : ஆதாயம் அடைவீர்கள்.

ஆயில்யம் : ஆர்வமின்மையான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு வழி முயற்சியில் ஆதாயம் அடைவீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : ஆரோக்கியம் மேம்ப்படும்.

உத்திரம் : முன்னேற்றமான நாள்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். வேலை விஷயமான பயணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

உத்திரம் : தடைகள் விலகும்.

அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சித்திரை : புரிதல் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களின் சுய ரூபங்கள் வெளிப்படும். சகோதரர்கள் வகையில் காரிய அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் விலகும்.

சுவாதி : அனுகூலமான நாள்.

விசாகம் : பிரார்த்தனைகள் கைகூடும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிலும் கோபமின்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது விரயங்களை தவிர்க்கும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : ஆலோசனை வேண்டும்.

அனுஷம் : சோர்வான நாள்.

கேட்டை : அனுபவம் வெளிப்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு. உடல் நிலையில் புதிய பொலிவுடனும், புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : நட்புகள் அதிகரிக்கும்.

பூராடம் : தெளிவுகள் உண்டாகும்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : புரிதல் உண்டாகும்.

அவிட்டம் : நெருக்கடிகள் மறையும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிந்தனைகளில் குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சில சாதகமற்ற சூழல் தோன்றி மறையும். வருவாயில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

அவிட்டம் : தேவைகள் பூர்த்தியாகும்.

சதயம் : நெருக்கடிகள் குறையும்.

பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 5, 2024

அரசு வழியிலான செயல்களில் தாமதம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சஞ்சலம் உண்டாகும். அதிரடியான சில செயல்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : தாமதம் உண்டாகும்.

உத்திரட்டாதி : சஞ்சலம் ஏற்படும்.

ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!