Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

ஜூலை 31, 2024 புதன்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆடி மாதம் - 15

31-07-2024 புதன்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆடி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - மாலை 06.10 pm வரை ஏகாதசி திதி பிறகு துவாதசி திதி

நக்ஷத்திரம் -பிற்பகல் 01.01 pm வரை ரோகிணி பிறகு மிருகசீரிஷம்

யோகம் - காலை 06.01 am வரை அமிர்த யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 09.15 AM -10.15 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம்10.45 AM-11.45 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 12.00 PM- 01.30 PM .

எமகண்டம் - 07.30 AM- 09.00 AM.

குளிகை - 10.30 AM - 12.00 PM.

சூரிய உதயம். - காலை 05.53 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.38 PM.

சந்திராஷ்டமம் - சுவாதி பிறகு விசாகம்

இன்றைய (31-07-2024) ராசிபலன் பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : கையிருப்புகள் அதிகரிக்கும்.

பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.

ரோகிணி : சோர்வுகள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வியாபார போட்டிகள் ஓரளவு குறையும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.

திருவாதிரை : ஆர்வமின்மை ஏற்படும்.

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைப்பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் சாதகமாகும்.

பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.

ஆயில்யம் : நுட்பங்களை அறிவீர்கள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். இறைப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : புரிதல் ஏற்படும்.

பூரம் : ஈடுபாடுகள் உண்டாகும்.

உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். கவின் கலைகள் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். காதணிகள் சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : ஈடுபாடுகள் ஏற்படும்.

அஸ்தம் : மேன்மை உண்டாகும்.

சித்திரை : புதுமையான நாள்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் தாமதம் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : புரிதல் அதிகரிக்கும்.

சுவாதி : விவேகத்துடன் செயல்படவும்.

விசாகம் : விரயம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

கடினமான காரியங்களையும் எளிமையான முறையில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு சிலருக்கு சாதகமாக அமையும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : பதவி உயர்வு சாதகமாகும்.

அனுஷம் : ஆசைகள் நிறைவேறும்.

கேட்டை : லாபங்கள் மேம்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயற்சி செய்வீர்கள். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பயணங்களின் மூலம் அனுகூலம் பிறக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : புத்துணர்ச்சியான நாள்.

பூராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்

உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.

திருவோணம் : சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.

அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வங்கிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் கவனம் வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : ஆதரவான நாள்.

பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 31, 2024

வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

பூரட்டாதி : மதிப்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

ரேவதி : மேன்மை உண்டாகும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!