Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

ஜூலை 27, 2024 வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆடி மாதம் - 11

27-07-2024 சனிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆடி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - அதிகாலை 03.28 am வரை ஷஷ்டி திதி பிறகு ஸப்தமி திதி

நக்ஷத்திரம் - மாலை 05.27 pm வரை ரேவதி பிறகு அஸ்வினி

யோகம் - காலை 06.01 am வரை அமிர்த யோகம் மாலை 05.27pm வரை மரண யோகம் பிறகு சித்த யோகம்

நல்ல நேரம் - 10.45 AM -11.45 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 12.15 AM-01.15 AM, 09.30 PM-10.30 PM

ராகு காலம் - 09.00 AM- 10.30 AM

எமகண்டம் - 01.30 PM- 03.00 PM.

குளிகை - 06.00 AM - 07.30 AM.

சூரிய உதயம். - காலை 05.52 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.39 PM.

சந்திராஷ்டமம் - பூரம் பிறகு உத்திரம்


இன்றைய (27-07-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடன்பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபார முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சாம்பல் நிறம்

அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.

பரணி : நெருக்கடிகள் உண்டாகும்.

கிருத்திகை : வெற்றிகரமான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் மேம்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

தனவரவு தாராளமாக இருக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பொருளாதார நிலை உயரும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : நம்பிக்கை பிறக்கும்.

திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

புனர்பூசம் : போட்டிகள் குறையும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : ஆதரவுகள் மேம்படும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வரவுகளில் கவனம் வேண்டும். பணி பொறுப்புகளால் கோபம் தோன்றி மறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : பொறுமையுடன் இருக்கவும்.

உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலை உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மந்தத்தன்மை குறையும்.

அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

சித்திரை : மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.

சுவாதி : ஆதாயம் ஏற்படும்.

விசாகம் : விவேகம் வேண்டும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கும் பொழுது கவனம் வேண்டும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். இனிமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : மாற்றமான நாள்.

அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சிலரின் சந்திப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : ஆதரவுகள் உண்டாகும்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : சாதகமான நாள்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். தம்பதிகளுக்குள் நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

உத்திராடம் : மனக்கசப்பு நீங்கும்.

திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுபவம் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : செலவுகள் ஏற்படும்.

சதயம் : அனுபவம் மேம்படும்.

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 27, 2024

கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.

உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

ரேவதி : புரிதல்கள் அதிகரிக்கும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!