Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

ஜூலை 17, 2024 புதன்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆடி மாதம் - 01

17-07-2024 புதன்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம்- தட்சிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆடி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - இரவு 07.16 pm, வரை ஏகாதசி திதி பிறகு துவாதசி திதி

நக்ஷத்திரம் - அதிகாலை 01.00 am வரை விசாகம் பிறகு நாள் முழுவதும் அனுஷம்

யோகம் - அதிகாலை 01.00 AM வரை மரண யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 09.15 AM - 10.15 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 12.00 PM- 01.30 PM .

எமகண்டம் - 07.30 AM- 09.00 AM.

குளிகை - 10.30 AM - 12.00 PM.

சூரிய உதயம். - காலை 05.51 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.39 PM.

சந்திராஷ்டமம் - ரேவதி பிறகு அஸ்வினி

இன்றைய (17-07-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

சமூகத்திலிருந்து தனித்து இருப்பதற்கான சூழ்நிலை அமையும். செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களால் விரயம் உண்டாகும். ஏற்ற, இறக்கமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

அஸ்வினி : தனித்து செயல்படுவீர்கள்.

பரணி : கவனம் வேண்டும்.

கிருத்திகை : விரயம் உண்டாகும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்பு கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : எதிர்ப்புகள் விலகும்.

ரோகிணி : குறிப்புகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பங்கு வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். மேல்நிலை கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.

பூசம் : ஆர்வமின்மை உண்டாகும்.

ஆயில்யம் : கையிருப்புகள் குறையும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கடன் செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பயணத்தில் மிதவேகம் நல்லது. கூட்டு வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

மகம் : அனுசரித்துச் செல்லவும்.

பூரம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியவை ஈடேறும். சொத்து விற்பது, வாங்குவதில் லாபகரமான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறையில் முன்னேற்றம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : லாபகரமான நாள்.

அஸ்தம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனை விற்பனையில் லாபம் ஏற்படும். பந்தய விஷயங்களில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : ஆர்வம் உண்டாகும்.

சுவாதி : லாபம் ஏற்படும்.

விசாகம் : மேன்மை உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆவணம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : மதிப்பளித்து செயல்படவும்.

கேட்டை : பொறுப்புகள் மேம்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

வாக்கு சாதுரியம் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மூலம் : தடைகள் மறையும்.

பூராடம் : தெளிவுகள் ஏற்படும்.

உத்திராடம் : விருப்பம் நிறைவேறும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் பிறக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திராடம் : வாதங்கள் மறையும்.

திருவோணம் : சிந்தித்துச் செயல்படவும்.

அவிட்டம் : அனுபவம் பிறக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : புதுமையான நாள்.

சதயம் : பொறுப்புகள் மேம்படும்.

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 17, 2024

வெளியூர் பயணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். காப்பகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : பயணங்கள் கைகூடும்.

உத்திரட்டாதி : ஆதாயம் மேம்படும்.

ரேவதி : ஒத்துழைப்பான நாள்.

Tags

Next Story