Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

ஜூலை 12, 2024 வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆனி மாதம் - 28

12-07-2024 வெள்ளிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - உத்தராயணம்

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆனி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - பிற்பகல் 12.14 pm வரை பஞ்சமி திதி பிறகு ஸப்தமிதிதி

நக்ஷத்திரம் - மாலை 04.20 pm வரை உத்திரம் பிறகு ஹஸ்தம்

யோகம் - அதிகாலை05.58 am வரை மரண யோகம் மாலை 04.20.pm வரை சித்த யோகம் பிறகு அமிர்த யோகம்

நல்ல நேரம் - 09.15 AM - 10.15 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 12.15 AM-01.15 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 10.30 PM- 12.00 PM .

எமகண்டம் - 03.00 PM- 04.30 PM.

குளிகை - 07.30 AM - 09.00 AM.

சூரிய உதயம். - காலை 05.49 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.40 PM.

சந்திராஷ்டமம் - அவிட்டம் பிறகு சதயம்

இன்றைய (12-07-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

மற்றவர்கள் பற்றிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். நெருக்கடியாக இருந்துவந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குழந்தைகளின் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : புரிதல்கள் அதிகரிக்கும்.

பரணி : உதவிகள் சாதகமாகும்.

கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

மனதளவில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் பிறக்கும். மனதில் உல்லாச பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் பிறக்கும்.

ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : பயணங்கள் மேம்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தனிபட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாசனை திரவிய வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகமான இடையூறுகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அலைச்சல் மேம்படும்.

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : இடையூறுகள் ஏற்படும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : குழப்பம் நீங்கும்.

பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஆயில்யம் : அனுகூலமான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : சிந்தித்துச் செயல்படவும்.

பூரம் : ஆதரவான நாள்.

உத்திரம் : அறிமுகம் உண்டாகும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் தனிபட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : கையிருப்புகள் குறையும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்து இன்னல்கள் குறையும். மூத்த சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுப காரிய செலவுகள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

சித்திரை : வரவுகள் உண்டாகும்.

சுவாதி : இன்னல்கள் குறையும்.

விசாகம் : புதுமையான நாள்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். அரசு வழியில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் சுப காரியங்கள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.

அனுஷம் : மாற்றமான நாள்.

கேட்டை : காரியங்கள் கைகூடும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். பிரபலமானவர்களின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். உறுதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : ஆதரவான நாள்.

பூராடம் : ஆர்வம் ஏற்படும்.

உத்திராடம் : வசதிகள் மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பணிகளால் மனதில் தெளிவு உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.

திருவோணம் : தெளிவுகள் உண்டாகும்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மறதி பிரச்சனைகளால் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம் : மாற்றம் உண்டாகும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 12, 2024

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். உத்தியோகம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் தெளிவு பிறக்கும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த தேக்கநிலை குறையும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். தன வரவுகள் மூலம் திருப்தி உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : தடைகள் அகலும்.

உத்திரட்டாதி : தெளிவுகள் உண்டாகும்.

ரேவதி : திருப்தியான நாள்.

Tags

Next Story