Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் ஜனவரி 28 2024 ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

பெருமைகள் கூடும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதற்கான வழிமுறைகளுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். உடன் பணி புரிவோரால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுமூகமான முறையில் அது மறையும்.

ரிஷபம்

வெற்றிகள் காண்பீர்கள். செய்த முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். உங்களுக்கான லாபங்கள் வந்து சேரும். குடும்பத்தினரால் ஏற்றம் காண்பீர்கள். பெரியவர்கள்ஆசீர்வாதங்கள் பூரணமாகக் கிடைக்கும்.

மிதுனம்

நலம் விளையும். பெற்றோர்கள் நலத்தில் கவனம் தேவை. மக்கள் தொடர்புத் துறையில் இருக்கும் நபர்களுக்கு பிரச்சனைகள் தலைதூக்கலாம். கவனம் தேவை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மிக நல்ல நாளாக அமையும்.

கடகம்

மகிழ்ச்சி கூடும். வில்லங்கங்கள் அனைத்தும் விலகும். சுறுசுறுப்புடன் இந்த நாளை எதிர்கொள்வீர்கள். மகிழ்ச்சியுடன் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். அந்தஸ்து சிறப்படையும்.

சிம்மம்

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். தென்மேற்கு, மேற்கு திசைகள் நலம் தரும்.

கன்னி

பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை அடையப் பெறுவார்கள். உங்களைவிட செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வங்கியில் பணத்தை சேமிக்கலாம். பெற்றோர்களால் அனுகூலம் அடையப் பெறுவீர்கள்.

துலாம்

மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறை சம்பந்தப்பவர்களுக்கு அமோகமான வரவெற்பு ஏற்படும். பொன்னும் பொருளும் பரிசாகப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி தரும் காலமிது. உங்களை விட வலியவர்கள் உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முன்வருவார்கள்.

விருச்சிகம்

சங்கடங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். அலைச்சல் கடுமையாக இருக்கும். பெரியவர்களை பகைத்துக் கொள்ள நேரிடலாம். குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதும் நல்லதே. குடும்பத்தில் எந்தவிதமான சங்கடங்களும் இராது.

தனுசு

உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையால் தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது. பொதுவில் நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவராத செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

மகரம்

அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும்.

கும்பம்

கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. கலைத்துறையினர், பெண்கள் ஆகியோருக்கு இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.

மீனம்

பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஜாதகம் வலுவான நிலையில் இருக்க வேண்டும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்