Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் ஜனவரி 27 2024 சனிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

நண்பர்களிடத்தில் மனசு வருத்தம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ரிஷபம்

உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும்.

மிதுனம்

தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவவர்களுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும்.

கடகம்

தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.

சிம்மம்

நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.

கன்னி

வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

துலாம்

முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரயமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். பிரச்சனையை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

விருச்சிகம்

நன்மைகளும் கெடுதல்களும் இணைந்து இருக்கும். உறவினரால் தொல்லைகள் ஏற்படலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். தனியாரில் வேலை செய்பவர்களுக்கு சில சோதனைகள் ஏற்படலாம். உங்களுக்குண்டான உரிய கௌரவம் கிடைக்கும்.

தனுசு

இன்றைய நாள் சுமாராக இருக்கும். பொருளாதார பலம் உண்டாகும். அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். வித்தைகள் சம்பந்தப்பட்ட படிப்புகள் சார்ந்தவர்களுக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் சச்சரவு ஏற்பட வழிவகை செய்து கொடுக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சச்சரவு ஏற்படாமலிருப்பதற்கு கவனம் தேவை.

மகரம்

உங்கள் அந்தஸ்து சிறப்படையும். ஆதாயங்கள் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் துரிதமாகவும் சரியாகவும் நடைபெறும். உங்களால் ஆன உதவிகளை செய்து வந்தால் நல்ல பல பலன்களைப் பெறலாம். பொதுவாக நற்பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

தொல்லைகள் குறையும். எந்த பிரச்சனையிலும் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார சுபிட்சம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

உதவிகள் கிடைக்கும், நண்பர்கள், உறவினர்கள் என பல வகைகளிலும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். லாபம் கிடைக்கும். உங்களுக்குண்டான கௌரவம் உயரும். திருமணமாகாதவர்களுக்கு அதற்கான நேரம் கனிந்து வரும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்