Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

கோப்புப்படம் 

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் ஜனவரி 17 2024 புதன்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

ரிஷபம்

புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்.

மிதுனம்

குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள்.

கடகம்

தேவையான உதவிகள் கிடைக்கும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும்.

சிம்மம்

எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.

கன்னி

வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

விருச்சிகம்

உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம்.

தனுசு

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.

மகரம்

பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடியுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

கும்பம்

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

மீனம்

குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!