Horoscope Today: 12 ராசியினருக்கான இன்றைய ராசி பலன்கள்

Horoscope Today: 12 ராசியினருக்கான இன்றைய ராசி பலன்கள்
X
தினசரி ராசிபலன் வெள்ளிக்கிழமை செப். 8 2023க்கான அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்

புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும்..

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

கடகம்

எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மன அமைதி கிடைக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல சிந்தனை ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள்.

கன்னி

பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மன குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம்.

துலாம்

தொழில், வியாபாரம் பற்றிய கவலை தோன்றும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வேலையில் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும்.

விருச்சிகம்

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

தனுசு

பணத் தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும்.

மகரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

கும்பம்

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

மீனம்

எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். திருப்தியான மன நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!