இன்றைய ராசிபலன் , 9 மே,2023: அனைத்து ராசிகளுக்கான ராசிபலன்

இன்றைய ராசிபலன் , 9 மே,2023: அனைத்து ராசிகளுக்கான ராசிபலன்
X

கோப்புப்படம் 

மே 9, 2023 அனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் கணிப்புகள் உங்களுக்காக

மேஷம்

இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

ரிஷபம்

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.

கடகம்

இன்று கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாக வும் பாடங்களை படிப்பது அவசியம்.

சிம்மம்

இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

கன்னி

இன்று பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

தனுசு

இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

மகரம்

இன்று மனஅமைதி உண்டாகும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.

கும்பம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.

Tags

Next Story
why is ai important to the future