Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 6 2024 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய ராசிபலன் :

மேஷம்: நினைத்தது நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்: நெருக்கடி நிலை ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறாமல் போகலாம். உறவினர் பகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மனக்கலக்கம் உருவாகும். குடும்பச்சுமை கூடும்.

மிதுனம்: யோகமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

கடகம்: முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பக்குவமாக பேசி பாராட்டு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

சிம்மம்: செல்வ நிலை உயரும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் நட்பால் நன்மையுண்டு. கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

கன்னி: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

துலாம்: பயணம் பலன் தரும் நாள். எதிர்பார்த்தபடியே பணம் வந்து சேரும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும். முடியும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்: வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். யாரையும் விமர்சிக்க வேண்டாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பயணங்களால் பலன் கிடைக்கும்.

மகரம்: முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பொருளாதார மேன்மை ஏற்படும். கடிதம் கனிந்த தகவலை தரும். தொழிலில் வளர்ச்சி உண்டு.

கும்பம்: கவலைகள் தீரும் நாள். ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறலாம். தொழில் முன்னேற்றம் உண்டு. வாங்கல், கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

மீனம்: போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை அக்கறை செலுத்தாத நண்பர்கள் இப்போது உங்களை தேடிவருவர். வியாபார விருத்தி ஏற்படும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!