Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 26 2024 திங்கள்கிழமை ராசி பலன்கள்

பஞ்சாங்கம் - சோபகிருது - மாசி - 14-

26/02/2024. திங்கட்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - மாசி

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

திதி - துவிதியை இரவு 10.59 PM வரை பிறகு திரிதியை

நக்ஷத்திரம்- அதிகாலை 01.38 am வரை பூரம் பிறகு உத்திரம்

யோகம் - அதிகாலை சித்த யோகம் 01-38 am வரை அமிர்த யோகம் காலை 06.28 am வரை பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 06.30 AM-07.30 AM, 04.30 PM-05.30 PM

ராகு காலம் - 07.30 PM- 09.00 PM.

எமகண்டம் - 10.30 PM - 12.00 PM.

குளிகை - 01.30 PM - 03.00 PM.

சூரிய உதயம்- காலை 06.30. AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.17 PM.

சந்திராஷ்டமம் - அவிட்டம்

இன்றைய(26-02-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். கலைத்துறையில் பொறுமை வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். சமூகம் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

அஸ்வினி : அனுகூலம் ஏற்படும்.

பரணி : பிரச்சனைகள் குறையும்.

கிருத்திகை : அபிவிருத்தியான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். நவீன யுக்திகளின் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஆதரவால் திட்டமிட்ட காரியம் நிறைவேறும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

மிருகசீரிஷம் : குழப்பங்கள் குறையும்.

திருவாதிரை : எண்ணங்கள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : காரியம் நிறைவேறும்.

கடக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

எதிலும் விவேகத்தோடு செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : விவேகம் வேண்டும்.

பூசம் : திருப்பங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மகம் : விரயங்கள் ஏற்படும்.

பூரம் : லாபகரமான நாள்.

உத்திரம் : தாமதங்கள் விலகும்.

கன்னி ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.

அஸ்தம் : ஏற்ற, இறக்கமான நாள்.

சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.

துலாம் ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்களிடத்தில் ஒத்துழைப்பு குறையும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் சாதகமாகும். இனம்புரியாத புதுவிதமான தேடல் அதிகரிக்கும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : புரிதல் உண்டாகும்.

விசாகம் : தேடல் அதிகரிக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : மகிழ்ச்சி கிடைக்கும்.

கேட்டை : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் பயண வாய்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : மதிப்பு மேம்படும்.

பூராடம் : வசதிகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மகர ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பரிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

உத்திராடம் : எண்ணங்கள் நிறைவேறும்.

திருவோணம் : ஒத்துழைப்பான நாள்.

அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். கணிதம் தொடர்பான துறைகளில் அலட்சியமின்றி செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : லேவண்டர்

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

சதயம் : பதற்றமான நாள்.

பூரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.

மீன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 26, 2024

சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.

உத்திரட்டாதி : சிக்கல்கள் குறையும்.

ரேவதி : தாமதங்கள் விலகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!