Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
ராசிபலன் (கோப்பு படம்)
பஞ்சாங்கம் சோபகிருது மாசி 05 (17/02/2024). சனிக்கிழமை .
வருடம்: சோபகிருது வருடம்.
அயனம்: உத்தராயணம் .
ருது: சிசிர ருதௌ.
மாதம்: மாசி.
பக்ஷம்: சுக்ல பக்ஷம்.
திதி அஷ்டமி பிற்பகல் 01.52 PM வரை பிறகு நவமி
நட்சத்திரம்: கிருத்திகை பிற்பகல் 02.02 PM வரை. பிறகு ரோகிணி
யோகம் காலை 06.32 வரை சித்த யோகம் பிறகு நாள் முழுவதும் அமிர்த யோகம்
நல்ல நேரம் 07.30 AM08.30 AM, 04.30 PM05.30 PM
ராகு காலம் -09.00 AM 10.30 AM.
எமகண்டம் 01.30 PM 03.00 PM.
குளிகை 06.00 AM 07.30 AM.
சூரிய உதயம் காலை 06.35. AM.
சூரிய அஸ்தமனம் மாலை 06.14 PM.
சந்திராஷ்டமம் அஸ்தம். &. சித்திரை
இன்றைய (17-02-2024) ராசி பலன்கள்
மேஷ ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். பக்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் விலகும்.
பரணி : நட்பு விரிவடையும்.
கிருத்திகை : திருப்தியான நாள்.
ரிஷப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். சிந்தனைகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையாட்களால் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமை வேண்டும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கிருத்திகை : தடுமாற்றமான நாள்.
ரோகிணி : தாமதம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
மிதுன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
அவசரமான முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிருகசீரிஷம் : பொறுப்பறிந்து செயல்படவும்.
திருவாதிரை : ஆலோசனை வேண்டும்.
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
கடக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
சாமர்த்தியமாக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்ம ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
சமூகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகம் : ஈடுபாடு ஏற்படும்.
பூரம் : லாபம் மேம்படும்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
கன்னி ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் தடைபட்ட பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.
அஸ்தம் : பயணங்கள் கைகூடும்.
சித்திரை : உற்சாகம் பிறக்கும்.
துலாம் ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உடனிருப்பவர்களிடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. எதிலும் பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சித்திரை : அலைச்சல் ஏற்படும்.
சுவாதி : மந்தமான நாள்.
விசாகம் : விவேகம் வேண்டும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : அறிமுகம் ஏற்படும்.
கேட்டை : தடைகள் விலகும்.
தனுசு ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
சில தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : மேன்மை ஏற்படும்.
உத்திராடம் : முயற்சிகள் சாதகமாகும்.
மகர ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
மனதளவில் புதிய சிந்தனை உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திராடம் : தனித்தன்மையான நாள்.
திருவோணம் : ஆதாயகரமான நாள்.
அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
கும்ப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தாய்வழி உறவுகளால் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
அவிட்டம் : தடைகள் விலகும்.
சதயம் : வாய்ப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
மீன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 17, 2024
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்துகொள்வீர்கள். மனதில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
உத்திரட்டாதி : நெருக்கம் ஏற்படும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.
Tags
- Horoscope Today
- Today Horoscope
- இன்றைய ராசிபலன்
- Today Horoscope February 17 2024
- Today Horoscope in Tamil
- Today Horoscope in Tamil for Aries
- Today Horoscope in Tamil for Taurus
- Today Horoscope in Tamil for Gemini
- Today Horoscope in Tamil for Cancer
- Today Horoscope in Tamil for Leo
- Today Horoscope in Tamil for Virgo
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu