Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 11 2024 ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

சோபகிருது வருடம் தை மாதம் 28ம் தேதி 11/02/2024. ஞாயிற்றுக்கிழமை.

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - ஹேமந்த ருதௌ.

மாதம் - தை ( மகர மாஸம்).

பக்ஷம் - சுக்ல பக்ஷம்.

திதி - அதிகாலை 03.20 AM வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்- சதயம் இரவு 09.15 PM வரை பிறகு. பூரட்டாதி

யோகம் நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 06.00 AM-07.00 AM & 03.30 PM- 04.30 PM *

ராகு காலம் - -04.30 PM 06.30 PM.

எமகண்டம் -மாலை 12.00 PM - 01.30 PM.

குளிகை - காலை 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம்- காலை 06.35. AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.12 PM.

சந்திராஷ்டமம் - புனர்பூசம். & பூசம்

இன்றைய (11-02-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடை விலகும் நாள்.

மிதுன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

மனதளவில் புதிய தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிப்புகளின் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

கடக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். வரவேண்டிய சில தனவரவுகள் தாமதமாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

கன்னி ராசிக்கான பலன்கள்பிப்ரவரி 11, 2024

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழக்கவழக்கங்கள் மூலம் மேன்மை அடைவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

துலாம் ராசிக்கான பலன்கள்பிப்ரவரி 11, 2024

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கஷ்டம் விலகும் நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் நிறைந்த நாள்.

மகர ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் தனவரவுகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனை கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

கும்ப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

மீன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 11, 2024

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். கவனம் வேண்டிய நாள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!