Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 06 2023 புதன்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். புதிய சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்:

முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரிடும். எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். தம்பதிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு திருப்தியளிக்கும்.

மிதுனம்:

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம் பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

கடகம்:

தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். அலைச்சல், டென்ஷன்கள் மறையும். பூர்வீக சொத்துவழியில் லாபங்கள் உண்டாகும்.

சிம்மம்:

கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்றம் காண்பார்கள் தொழிலை விரிவுசெய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

கன்னி:

எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சக ஊழியர் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும். கவனமாக பேசி பழகுவது நல்லது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

துலாம்:

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன்மூலம் பலனையும் அடையமுடியும்.

விருச்சிகம்:

சிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்வீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் ஓரளவுக்கு சாதகமான பலனை அடைவீர்கள்.. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு:

சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்கமுடியும்.

மகரம்:

கமிஷன், கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவுக்கு லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் பொறாமைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும்.

மீனம்:

சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வெளியூர், வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும்.. வாங்கிய வங்கிக்கடன்களை அடைத்துவிடுவீர்கள்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!