Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 05 2023 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் நல்ல மேன்மை உண்டாகும்.

ரிஷபம்:

கொடுக்கல்- வாங்கல் சீராக நடைபெறும். எளிதில் லாபம் காணமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுனம்:

புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி இருக்கும். பொன், பொருள் சேரும். மங்கலகரமான சுபகாரியங்கள் நடைபெறும்.. புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

கடகம்:

எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் சாதனை படைப்பார்கள். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும்.

சிம்மம்:

வியாபாரம் தொடர்பான அலைச்சலும் கவலையும் ஏற்படும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். எடுக்கும் காரியங்களில் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி கடன்கள் படிப்படியாகக் குறையும்.

கன்னி:

சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். கொடுக்கல்- வாங்கல்களில் கவனமுடன் செயல்பட்டால் சிறப்பான லாபங்கள் உண்டாகும்.

துலாம்:

மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவையும் ஏற்றத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம்:

தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் நற்பலனை அடையமுடியும். பணியில் இருந்த கெடுபிடிகள் குறைந்து நிம்மதியானநிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலையை பெறுவார்கள்.

தனுசு:

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்ததில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள்.

மகரம்:

உங்களின் பலமும் வளமும் கூடக்கூடிய காலமாக அமையும். கடந்தகால கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு கடனுதவிகள் கிடைக்கும்.

கும்பம்:

உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் பலனளிக்கும். செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானமாக இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அமையும்.

மீனம்:

எந்தவொரு செயலையும் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்கள் அமையும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!