Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today | InstaNews
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 28, 2023 வியாழக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

வாய்ப்புக்கள் தேடிவந்து கதவைத் தட்டும். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்

கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பொருளாதாரநிலையிலும் பற்றாக்குறைகள் நிலவுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபங்கள் தடைப்படும்.

மிதுனம்

உங்களின் பலம் குறைந்து எதிரிகளின் பலம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சகஜநிலை இருந்தாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் ஏற்படும். பிறரிடம் எந்தப்பொருளையும் இரவல் வாங்குவதைத் தவிர்க்கவும்.

கடகம்

பணியில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் தவிர்த்துவிடுவது நல்லது.

சிம்மம்

எதிர்பாராத வீண்செலவுகள் அதிகரிக்கும். உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மனைவி, பிள்ளைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திணற வேண்டிவரும்.

கன்னி

கடன் பிரச்சினைகள் அதிகரித்து சேமிப்புக் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் இழுபறியான நிலையே நீடிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள்.

துலாம்

கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்பதால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமற்ற பலனை சந்திப்பார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்குக் குறைவான பணியே அமையும்.

விருச்சிகம்

வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். மாணவர்கள் எதிலும் சுறு சுறுப்புடன் இருப்பார்கள்.

தனுசு

சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமையும்.

மகரம்

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும் என்றாலும் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

கும்பம்

உடல்நிலை சற்றே சோர்வாக அமையும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். புத்திரவழியில் சில மனசஞ்சலங்கள் தோன்றும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது.

மீனம்

இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!