Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today | InstaNews
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 26, 2023 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

உறவினர்கள் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மனசஞ்சலங்கள் அதிகரிப்பதால் அமைதிக்குறைவு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமங்களையே சந்திப்பீர்கள்.

ரிஷபம்

கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றால் பெரிய சிக்கல்களையும், வம்பு வழக்குகளையும் சந்திப்பீர்கள். கொடுத்த கடன்களை வசூலிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். அரசியலில் மறைமுக எதிரிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

மிதுனம்

நிதானம் தேவை. கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றிக்கொள்வது உத்தமம். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கடன்கள் அதிகரிக்கும்.

கடகம்

உங்களுக்கு எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணவிவகாரங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

சிம்மம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். வயிற்றுவலி தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் நிலவுவதால் மனநிம்மதி குறையும்.

கன்னி

தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றாலும் பாதிக்கப்பட நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

துலாம்

தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலையில் ஓரளவுக்கு பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகளால் கடன்வாங்க நேரிடும்.

விருச்சிகம்

திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங்கியவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு பழுதடைவதால் வீண்விரயங்களும் உண்டாகும். புத்திரர்களால் மனசஞ்சலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதிக் குறையும். சேமிக்க முடியாமல் போகும்.

தனுசு

கொடுக்கல்- வாங்கல் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியாமல் போகும். வீண் விரயமும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும்.

மகரம்

பெரிய முதலீடுகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்குக் கொடுத்த பணத்தைத் திரும்பப்பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.

கும்பம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையும்.

மீனம்

சிலருக்கு பொருட்தேக்கம் உண்டாகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கைநழுவிப்போகும். தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்வதில் தடைகள் ஏற்பட்டு அவர்களாலும் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil