Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today | InstaNews
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 25, 2023 திங்கள்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணம் உண்டாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். கடன் பிரச்சினைகளும் ஓரளவு தீரும்.

ரிஷபம்

திருமண சுபகாரிய முயற்சிகளில் பல இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் தேக்கம் ஏற்படாது. கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை.

மிதுனம்

பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காவிட்டாலும் சிலரின் நட்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தம்பதிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும்.

கடகம்

பணியில் இருப்பவர்களுக்கு உயர்வுகளும் இடமாற்றங்களும் தாமதமாகத்தான் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

சிம்மம்

எதிர்பாராத பணவரவுகள் திடீரென்று கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். வீடு, மனை, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் அமையும்.

கன்னி

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய யோகமும் அதற்கு அரசுவழியில் உதவியும் கிடைக்கும்.

துலாம்

தொழில், வியாபாரம் செய்பவர்களும் அபரிதமான லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள்.

விருச்சிகம்

சக ஊழியர்கள் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவதும் நல்லது.

தனுசு

தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகள் நிலவும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலை ஏற்படும். லாபம் குறைந்து பொருள்தேக்கம் ஏற்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமையற்ற நிலையே நிலவும்.

மகரம்:

பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும்.

கும்பம்:

தேவையற்ற பழிச்சொல் ஏற்படும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகநேரிடும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் உண்டாகும்.

மீனம்:

அசதி, சோர்வு போன்றவற்றால் எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்துமுடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும். தம்பதிகளுக்கிடையே உண்டாகக் கூடிய வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!