Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today | InstaNews
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 23, 2023 சனிகிழமை ராசி பலன்கள்

மேஷம்

சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும்.

ரிஷபம்

சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும்.

மிதுனம்

புதிய பொருட்சேர்க்கைகளும் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும்.

கடகம்

எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்றைய நாள் நன்றாக இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும்.

கன்னி

அரசுவழியில் மானிய உதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும். எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும்.

துலாம்

ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும். கல்வியில் நல்ல மேன்மையான நிலைகள் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்

அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். நல்ல நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை

தனுசு

வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள்.

மகரம்

வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.

கும்பம்

பொதுநலக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் அதனால் பொருளாதார உயர்வுகளும் உண்டாகும். ஆன்மிக,தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும்.

மீனம்

உற்றார்- உறவினர்களின் வருகை கடந்தகால பிரச்சினைகளை மறந்து ஒற்றுமையை நிலைநாட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கமுடியும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!