Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today | InstaNews
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 21, 2023 வியாழக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நிறைவேறும். தம்பதிகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்

பணவரவு திருப்தி தரும். வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதை ஆராய்ந்து செய்வது நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தடைப்படும். தொழில், வியாபாரம் சுமாரான முறையில் நடைபெறும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள்.

மிதுனம்

பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள் வழியிலும் நிம்மதியற்ற நிலையே நீடிக்கும். பொருளாதார நிலையிலும் தடைகள் ஏற்படும்.

கடகம்

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப்பலனை அடையமுடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிம்மதியற்ற நிலைகளை சந்திப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.

சிம்மம்

போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும். தேவையற்ற பயணங்களும், அதன்மூலம் அலைச்சல்களும் உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கன்னி

குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். பணிகளை ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாமல் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

துலாம்

வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

விருச்சிகம்

பணியில் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்துவழியில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். தம்பதிகளுக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

தனுசு

பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், செரிமானக் கோளாறு, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். உறவினர்களின் ஆதரவைப்பெற சில நேரங்களில் அவர்களை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும்.

மகரம்

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் சீராக இருப்பதால் கடன்கள் குறையும். பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடையமுடியும்.

கும்பம்

கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும் . கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

மீனம்

குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். சில நேரங்களில் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!