Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 02 2023 சனிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்:

கொடுக்கல்- வாங்கல் சீராக நடைபெறும். பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். பதவிகள் தேடிவரும். ஆதரவும் பெருகும். மறைமுக வருவாய்கள் பெருகும்.

ரிஷபம்:

குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிரிந்தவர்கள்கூட ஒன்றுகூடி மகிழ்வார்கள். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மிதுனம்:

சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறி மன நிம்மதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு யாவும் கிடைக்கப்பெறும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கடகம்:

நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

சிம்மம்:

பயணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும்.

கன்னி:

எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்:

வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த லனை அடைவதில் காலதாமதம் உண்டாகும். உடல்நிலையும் சிறப்பாக அமையும் என்று கூறமுடியாது. அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

விருச்சிகம்:

எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படும்.

தனுசு:

எந்த காரியத்தையும் கடின உழைப்பிற்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேறமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது.

மகரம்:

சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது.

கும்பம்:

கொடுக்கல்-வாங்கலில் அதிக நிதியை சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் அதிகரிக்கவே செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

மீனம்:

திருமண சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்யமுடியும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!