Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
மேஷம்
கடன் கொடுத்தபணத்தை எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு சற்றே அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
ரிஷபம்
தம்பதிகளுக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.
மிதுனம்
முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டி வரும். வருமானம் போதிய அளவு இருக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். இன்றைய நாள் சுமாராகத்தான் இருக்கும்
கடகம்
பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணம் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
சிம்மம்
அதிக உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது. பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். ஆன்மிக காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
கன்னி
உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்திப் படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப்பெறும்.
துலாம்
எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.
விருச்சிகம்
எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கவனம் தேவை. குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.
தனுசு
வீண் அலைச்சல் உண்டாகலாம். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
மகரம்
தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.
கும்பம்
உடல்நலனில் கவனம் செலுத்த நேரிடும். மனசஞ்சலங்களும், தேவையற்ற வீண்செலவுகளும் அதிகரிக்கும். பண விவகாரத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.
மீனம்
முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலையில் கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். உறவினர்களிடையே வீண்விரோதங்கள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள்.
Tags
- Horoscope Today
- Today Horoscope
- இன்றைய ராசிபலன்
- Today Horoscope 19 December 2023
- Today Horoscope in Tamil
- Today Horoscope in Tamil for Aries
- Today Horoscope in Tamil for Taurus
- Today Horoscope in Tamil for Gemini
- Today Horoscope in Tamil for Cancer
- Today Horoscope in Tamil for Leo
- Today Horoscope in Tamil for Virgo
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu