Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
மேஷம்
வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையீட வேண்டாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம்.
ரிஷபம்
தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.
மிதுனம்
எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேலைப்பளுவால் உடல்நிலை சோர்வடையும். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும்.
கடகம்
பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கல்வியில் மந்தநிலை ஏற்படும் என்பதால் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்
எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். தேவையற்ற மனசஞ்சலங்களும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.
கன்னி
நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப வாழ்வில் பிரச்சினைகள் தோன்றும். அனுசரித்துச் செல்வதினால் ஒற்றுமை குறையாது. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும்.
துலாம்
திருமண காரியங்கள் தடைப்படும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருட்சேர்க்கைகளும் ஆடை, ஆபரணமும் சேரும்.
விருச்சிகம்
வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபம் காணமுடியும். பணவிஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்துவிடுவது உத்தமம். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாக கால தாமதம் ஏற்படும்.
தனுசு
தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடு செய்வதற்கு முன் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப்பெற இயலாது. ஊழியர்களால் வீண்பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
மகரம்
தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும், கௌரவமான பதவிகளைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் வேலைப்பளுவைக் குறைக்கும்.
கும்பம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பணியில் நிம்மதியான நிலைகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்..
மீனம்
எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மனஉளைச்சல்கள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பணவரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண்செலவுகளைக் குறைப்பது நல்லது
Tags
- Horoscope Today
- Today Horoscope
- இன்றைய ராசிபலன்
- Today Horoscope 18 December 2023
- Today Horoscope in Tamil
- Today Horoscope in Tamil for Aries
- Today Horoscope in Tamil for Taurus
- Today Horoscope in Tamil for Gemini
- Today Horoscope in Tamil for Cancer
- Today Horoscope in Tamil for Leo
- Today Horoscope in Tamil for Virgo
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu