Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 17, 2023 ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

பணவரவுகளில் இருந்து வந்த தடைகள் விலகும். கடன்கள் சற்றுக் குறையும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்கும்.

ரிஷபம்

கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும்.

மிதுனம்

தொழிலில் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும். மாணவர்கள் கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

கடகம்

தேவையற்ற பொழுதுபோக்குகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பதன் மூலம் நற்பலனைப் பெற முடியும். ஓரளவுக்கு சேமிப்பு பெருகும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் பலவழிகளில் வந்து குவியும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள்.

கன்னி

வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் அமையும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும்.. புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.

துலாம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். நல்ல பலன்கள் உண்டு. திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் மனமகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் அமையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும்.

தனுசு

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். சிலருக்கு வாய்ப்புகள் வந்து குவிவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மகரம்

பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பாராத வீண்விரயங்கள், தேவையற்ற செலவுகள் உண்டாகும். பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கும்பம்

பணியில் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண் பிரச்சினைகளாலும் மனக்குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்

அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகள் தாமதமாகும்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!