Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 16, 2023 சனிக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தடைகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சி தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைப்படும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். பெற்றோர் வழியில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும்.

ரிஷபம்

வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றத்தை அடையமுடியும்

மிதுனம்

தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை உண்டாக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க தேவையான உத்வேகம் கிட்டும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

கடகம்

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் பலவழிகளில் வரும். பொன், பொருள் சேரும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலமாக அமையும்..

சிம்மம்

குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும்.

கன்னி

புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் போன்ற யாவும் வாங்கக்கூடிய யோகம் அமையும். சேமிப்பு பெருகும். தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும்.

துலாம்

குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடை, தாமதம் ஏற்படலாம். எதிர்பாராத பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.

விருச்சிகம்

டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பியபடி காரியங்கள் நடக்கும். புகழ், பெருமை யாவும் உயரும். உடல்நலம் அற்புதமாக அமையும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சியுடனேயே இருப்பார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். கவலை வேண்டியதில்லை.

தனுசு

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக அமைவதால் எல்லாத்தேவைகளும் பூர்த்தியாகும். சிலருக்கு புதுவீடு கட்டி குடிபுகும் எண்ணம் மேலோங்கும். பெரிய தொகை சேமிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

மகரம்

மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றியினைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் நல்ல லாபத்தை உண்டாக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்

கும்பம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

மீனம்

கடன்கள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். எல்லாவகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும்.

Tags

Next Story
ai automation in agriculture