Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 13, 2023 புதன்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

சுபகாரியங்கள் கைகூடி வரும். தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திரவழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்களின் பெயர், புகழ், உயரும். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.

மிதுனம்

உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணியில் திருப்தியான நிலையை அடைவீர்கள். அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

கடகம்

பதட்டத்தை கைவிடுவது முன்னேற்றத்துக்கு உதவும். காரிய தாமதம் உண்டாகும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும்.

சிம்மம்

பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக அமையும். கடன்கள் குறையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை.

கன்னி

பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.

விருச்சிகம்

பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடனில்லாத வாழ்க்கை அமையும். வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும்.

தனுசு

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலும் அதிகரிக்கும்.

மகரம்

பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண்பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் அமையும். எதிர்பார்த்த வாய்ப்பு அமையும். பிறரை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.

கும்பம்

பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் பலன்களும் உண்டாகும். பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது உத்தமம். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும்.

மீனம்

தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படடும் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அக்கறையோடு படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் உயர்வினை அடையமுடியும்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்