Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
மேஷம்
வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். சோர்வு தோன்றும் என்றாலும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர்.
ரிஷபம்
பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.
மிதுனம்
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகும். எதிர்பார்க்கும் உயர்வு கிட்டும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
கடகம்
வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. விவசாயிகளுக்கு விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள நிதிவரவு இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு உற்பத்தியை அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.
சிம்மம்
புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.
கன்னி
கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பேசும் போது வார்த்தைகளை கவனித்து பேசுவது நல்லது. கல்வியில் தடைகள் விலகி மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
துலாம்
எடுக்கும் முயற்சிகள் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் தோன்றினாலும் எந்தக் காரியத்திலும் எளிதாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
விருச்சிகம்
உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். கடன்கள் அனைத்தும் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள்.
தனுசு
தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்த்த லாபம் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பணம் பலவழிகளில் கிடைக்கும்.
மகரம்
குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும்.
கும்பம்
கடனுதவிகள் தடையின்றிக் கிடைப்பதால் தொழிலில் நல்ல அபிவிருத்தி பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
மீனம்
தம்பதிகளுகிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறக்கூடிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்
Tags
- Horoscope Today
- Today Horoscope
- இன்றைய ராசிபலன்
- Today Horoscope 11 December 2023
- Today Horoscope in Tamil
- Today Horoscope in Tamil for Aries
- Today Horoscope in Tamil for Taurus
- Today Horoscope in Tamil for Gemini
- Today Horoscope in Tamil for Cancer
- Today Horoscope in Tamil for Leo
- Today Horoscope in Tamil for Virgo
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu