Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 10 2023 ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

சுபவிரய செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

உடன்பிறந்தவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இதுவரை இருந்த உடல்நலக் கோளாறுகள் படிப்படியாக விலகும். மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். பணிகளில் புதுத்தெம்புடனும், பொலிவுடனும் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களும் அதன்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

கடகம்

அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. குடும்ப வாழ்வில் குதூகலமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைபட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

சிம்மம்

நினைத்ததை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று செயல்படுவீர்கள். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நட்பு மலரும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி

கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. வீண்பகை உண்டாகலாம். எனவே கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சுமூகமாக நடைபெறும். தொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியும். தாராளமான பணவரவுகள் உண்டாகும்.

துலாம்

வம்பு வழக்குகள் விலகி சாதகப்பலன் உண்டாகும். அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் உதவிகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் அபிவிருத்தி அடையும். கேட்ட இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.

விருச்சிகம்

தொழில், வியாபாரத்தில் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டுத்தொழிலிலும் ஒற்றுமையான செயல்பாட்டால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

தனுசு

சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளும் ஆர்டர்களும் குவியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளும் எதிர்பாராத ஏற்றத்தை ஏற்படுத்தும்..

மகரம்

கொடுத்த வாக்கை காப்பாற்றி மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உத்தியோகம் நல்லபடியாக இருக்கும். மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடன் பிறந்தோர் உறுதுணையாக இருப்பர். எளிதில் கோபப்படக்கூடிய நபர்கள் யாரிடமும் கவனமாக பேசுவது நல்லது.

கும்பம்

பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.

மீனம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் படிப்பிற்கேற்ப சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். மனதுக்கு சந்தோசப் படக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!