Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

ஆகஸ்ட் 4, 2024 ஞாயிற்றுக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆடி மாதம் - 19

04-08-2024 ஞாயிற்றுக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம்

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆடி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - மாலை 05.32 pm வரை அமாவாசை திதி பிறகு பிரதமை திதி

நக்ஷத்திரம் -பிற்பகல் 02.55 pm வரை பூசம் பிறகு ஆயில்யம்

யோகம்-நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM -08.45 AM, 04.45 PM -05.45 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 01.30 PM-02.30 PM

ராகு காலம் - 04.30 PM- 06.00 PM

எமகண்டம் - 12.00 PM- 01.30 PM.

குளிகை - 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம். - காலை 05.55 AM

சூரிய அஸ்தமனம் - மாலை 06.35 PM.

சந்திராஷ்டமம் - மூலம் பிறகு பூராடம்

இன்றைய (04-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணம் ஏற்படும். அரசு சார்ந்த ஆவணங்களை கையாள்வதில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அஸ்வினி : அனுபவம் ஏற்படும்.

பரணி : புரிதல் உண்டாகும்.

கிருத்திகை : வெற்றிகரமான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

உடன்பிறந்தவர்களின் வகையில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரோகிணி : நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உத்தியோகப் பணிகளில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தினை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும், தெளிவும் உண்டாகும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

திருவாதிரை : மாற்றம் பிறக்கும்.

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

பணிகளில் முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். சகோதர உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மகம் : புரிதல் உண்டாகும்.

பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.

உத்திரம் : பணிகள் நிறைவேறும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்நிலை கல்வியில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.

அஸ்தம் : மேன்மை உண்டாகும்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரமான செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு பணிகளில் இழுபறியான சூழ்நிலை ஏற்படும். முயற்சிக்கேற்ப சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் அகலும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகள் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : சேமிப்புகள் குறையும்.

சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

விசாகம் : முதலீடுகள் மேம்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

எதிர்கால முதலீடுகள் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். குழந்தைகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.

கேட்டை : புதுமையான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

வாழ்க்கைத்துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எளிமையான செயல்கள் கூட தாமதமாகி நிறைவு பெறும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.

பூராடம் : அலைச்சல் உண்டாகும்.

உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். சுப காரிய எண்ணம் பலிதமாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

உத்திராடம் : நன்மை உண்டாகும்.

திருவோணம் : ஆதரவான நாள்.

அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : முடிவுகளை எடுப்பீர்கள்.

சதயம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 4, 2024

குழந்தைகளின் செயல்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

ரேவதி : பொறுப்புகள் கிடைக்கும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!