Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

ஆகஸ்ட் 23, 2024 வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆவணி மாதம் - 07

23-08-2024 வெள்ளிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வருஷ ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - மாலை 03.13 pm வரை சதுர்த்தி திதி பிறகு பஞ்சமி திதி

நக்ஷத்திரம் - அதிகாலை 03.13 am வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி

யோகம்- காலை 06.01 am வரை சித்த யோகம் பிறகு நாள் முழுவதும் அமிர்த யோகம்

நல்ல நேரம் - 09.15 AM - 10.15 AM, 04.45 PM - 05.45PM

கௌரி நல்ல நேரம் 12.15 AM-01.15 AMம், 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 10.30 AM- 12.00 PM .

எமகண்டம் - 03.30 PM- 04.30 PM.

குளிகை - 07.30 AM - 09.00 AM.

சந்திராஷ்டமம் - அதிகாலை 03.13 am வரை மகம் பிறகு பூரம்

இன்றைய (23-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்பு அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.

பரணி : அனுபவங்கள் கிடைக்கும்.

கிருத்திகை : நெருக்கம் மேம்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். நுண்கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.

ரோகிணி : தன்னம்பிக்கை மேம்படும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை தரும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு மேம்படும்.

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : மேன்மையான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

உத்தியோகப் பணிகளில் மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். இறைவழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.

பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்துச் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

மகம் : அனுசரித்துச் செல்லவும்.

பூரம் : ஏற்ற, இறக்கமான நாள்.

உத்திரம் : கவனம் வேண்டும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிர்வாகத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் திறமை வெளிப்படும். வாக்குவன்மை மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.

சித்திரை : லாபங்கள் அதிகரிக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : ஒத்துழைப்புகள் மேம்படும்.

சுவாதி : மாற்றமான நாள்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். கலை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம் விலகும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கேட்டை : குழப்பம் விலகும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தனது கருத்துகளை முன்வைப்பீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : ஆதரவான நாள்.

உத்திராடம் : அனுபவம் மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : இன்னல்கள் குறையும்.

திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.

அவிட்டம் : செல்வாக்கு மேம்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

தானிய வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அடிப்படை கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதமும் படிப்படியாக குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

சதயம் : தாமதம் குறையும்.

பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 23, 2024

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சிந்தனைப்போக்கில் குழப்பம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : புரிதல் மேம்படும்.

உத்திரட்டாதி : மாற்றமான நாள்.

ரேவதி : கவனம் வேண்டும்.

Tags

Next Story