Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

ஆகஸ்ட் 21, 2024 புதன்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் -குரோதி வருடம் ஆவணி மாதம் - 05

21-08-2024 புதன்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்

திதி - இரவு 08.39 pm வரை துவிதியை திதி பிறகு திருதியை திதி

நக்ஷத்திரம் - காலை 06.22 am வரை சதயம் பிறகு பூரட்டாதி

யோகம்- காலை 06.04 am வரை மரண யோகம் காலை 06.23 am வரை

சித்த யோகம், பிறகு நாள் முழுவதும் அமிர்த யோகம்

நல்ல நேரம் - 09.15 AM - 10.15 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 09.15 AM-10.15 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 12.00 PM- 01.30 PM .

எமகண்டம் - 07.30 AM- 09.00 AM.

குளிகை - 10.30 AM - 12.00 PM.

சூரிய உதயம். - காலை 05.57 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.27 PM.

சந்திராஷ்டமம் - காலை 06.23 am வரை பூசம், பிறகு ஆயில்யம்

இன்றைய (21-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

வியாபார பணிகளில் திறமைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். செல்வ சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : திறமைகள் மேம்படும்.

பரணி : லாபம் பெருகும்.

கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சமூகம் பற்றிய காணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : கவலைகள் குறையும்.

ரோகிணி : பதவிகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.

திருவாதிரை : அனுபவங்கள் கிடைக்கும்.

புனர்பூசம் : ஆதரவான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

இனம்புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பணிகளில் பொறுமையை கையாளவும். கடன் தொடர்பான நெருக்கடிகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்

புனர்பூசம் : சோர்வான நாள்.

பூசம் : பொறுமையை கையாளவும்.

ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

உறவினர்களின் வழியாக உதவிகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது நல்லது. அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

மகம் : உதவிகள் கிடைக்கும்.

பூரம் : லாபம் மேம்படும்.

உத்திரம் : மேன்மை உண்டாகும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

உத்தியோகத்தில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும்.

சித்திரை : அனுகூலமான நாள்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செயல்படவும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவின் கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

சித்திரை : இலக்குகள் பிறக்கும்.

சுவாதி : அனுசரித்துச் செயல்படவும்.

விசாகம் : ஆர்வம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

அனுஷம் : பொறுப்புகள் கிடைக்கும்.

கேட்டை : மேன்மையான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். விற்பனை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்

மூலம் : அனுபவங்கள் கிடைக்கும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : அனுபவம் மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சுத் திறமைகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகளில் சிந்தித்துச் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : சேமிப்புகள் மேம்படும்.

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்

அவிட்டம் : ஆதரவான நாள்.

சதயம் : மாற்றமான நாள்.

பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 21, 2024

உடனிருப்பவர்களால் எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : நெருக்கடியான நாள்.

உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

ரேவதி : கவனம் வேண்டும்.

Tags

Next Story