Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

ஆகஸ்ட் 19, 2024 திங்கள்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் குரோதி வருடம் ஆவணி மாதம் 03

19-08-2024 திங்கட்கிழமை

வருடம் குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம் - சுக்ல பக்ஷம்

திதி - அதிகாலை 03.06 am வரை சதுர்த்தசி திதி பிறகு பௌர்ணமி திதி

நக்ஷத்திரம் - காலை 09.08 am வரை திருவோணம் பிறகு அவிட்டம்

யோகம் - காலை 09.08 am வரை அமிர்த யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் 06.15 AM 07.15 AM, 04.45 PM 05.45 PM

கௌரி நல்ல நேரம் 09.15 AM10.15 AM, 07.30 PM08.30 PM

ராகு காலம் 07.30 AM 09.00 AM .

எமகண்டம் 10.30 AM 12.00 PM.

குளிகை 01.30 PM 03.00 PM.

சூரிய உதயம் காலை 05.57 AM.

சூரிய அஸ்தமனம் மாலை 06.28 PM.

சந்திராஷ்டமம் காலை 09.08 am வரை திருவாதிரை, பிறகு புனர்பூசம்

இன்றைய (19-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

காப்பீடு தொடர்பான வரவுகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : வரவுகள் கிடைக்கும்.

பரணி : முதலீடுகள் அதிகரிக்கும்.

கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

வேளாண்மை பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணை மூலம் அனுகூலம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனைவியுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

ரோகிணி : பயணங்கள் கைகூடும்.

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் மனதில் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். இணையம் முதலீடுகளில் பொறுமையுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மிருகசீரிஷம் : மந்தமான நாள்.

திருவாதிரை : அலைச்சல் அதிகரிக்கும்.

புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

மனதில் சுயதொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். அரசு பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : கலகலப்பான நாள்.

பூசம் : பொறுமை வேண்டும்.

ஆயில்யம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை தரும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மகம் : முன்னேற்றம் ஏற்படும்.

பூரம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

ஒப்பந்தம் சார்ந்த பணிகள் மூலம் லாபம் மேம்படும். மனதில் புதுமையான இலக்குகள் பிறக்கும். குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகப் பணிகளில் மேன்மை ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

உத்திரம் : லாபங்கள் மேம்படும்.

அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

சித்திரை : ஆர்வம் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். மனதில் நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்வீர்கள். துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். திடீர் செலவுகள் மூலம் கையிறுப்புகள் குறையும். கட்டிடப் பணிகளில் லாபம் அடைவீர்கள். மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

சித்திரை : நம்பிக்கைகள் மேம்படும்.

சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.

விசாகம் : மேன்மை ஏற்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான தெளிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

கேட்டை : ஆதாயம் ஏற்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

நண்பர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். மனை சார்ந்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்பு கிடைக்கும். புதுவிதமான ஆடைகளின் சேர்க்கை ஏற்படும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : கலகலப்பான நாள்.

பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்திராடம் : செய்திகள் கிடைக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

சிலருக்கு எதிர்பாராத அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். சாஸ்திரம் தொடர்பான செயல்களில் தெளிவு பிறக்கும். தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : முன்னேற்றமான நாள்.

அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய குழப்பம் குறையும். கால்நடைகள் மூலம் லாபம் மேம்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் அமைதியின்மையான சூழ்நிலை உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

சதயம் : லாபங்கள் மேம்படும்.

பூரட்டாதி : அமைதியின்மையான நாள்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 19, 2024

உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

உத்திரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.

ரேவதி : ஈடுபாடு ஏற்படும்.

Tags

Next Story