Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

ஆகஸ்ட் 17, 2024 சனிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆவணி மாதம் - 01

17-08-2024 சனிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - அதிகாலை 05.25 am வரை துவாதசி திதி பிறகு திரயோதசி திதி

நக்ஷத்திரம் - காலை 10.35 am வரை பூராடம் பிறகு உத்திராடம்

யோகம்- நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 04.45 PM - 05.45PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 09.30 PM-10.30 PM

ராகு காலம் - 09.00 AM- 10.30 AM .

எமகண்டம் - 01.30 PM- 03.00 PM.

குளிகை - 06.00 AM - 07.30 AM.

சூரிய உதயம். - காலை 05.57 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.29 PM.

சந்திராஷ்டமம் - காலை 10.35 am வரை ரோகிணி பிறகு மிருகஷிரிஷம்

இன்றைய (17-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வாகன பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செய்தொழில் நிமித்தமான புதிய சிந்தனைகள் பிறக்கும். எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடைகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : இன்னல்கள் குறையும்.

பரணி : சிந்தனைகள் பிறக்கும்.

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

சேவை பணிகளில் அனுகூலம் ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிறு தொழில் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தூரதேசப் பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : தாமதங்கள் குறையும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். வரவுகளில் சில நெருக்கடிகள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அலைச்சல் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

திருவாதிரை : பேச்சுக்களை தவிர்க்கவும்.

புனர்பூசம் : விழிப்புணர்வுடன் இருக்கவும்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். வெளி வட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.

பூசம் : நம்பிக்கைகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : சாதகமான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், மதிப்பும் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மகம் : வாய்ப்புகள் அமையும்.

பூரம் : மதிப்புகள் கிடைக்கும்.

உத்திரம் : லாபகரமான நாள்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். எளிமையான சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். இணைய துறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்புகளை வைத்துக் கொள்ளவும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : குழப்பமான நாள்.

அஸ்தம் : அனுபவம் வெளிப்படும்.

சித்திரை : சிந்தித்துச் செய்லபடவும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தடையாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : சாதகமாக அமையும்.

சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

விசாகம் : புதுமையான நாள்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.

அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். இன்சூரன்ஸ் காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

மூலம் : அனுபவங்கள் கிடைக்கும்.

பூராடம் : அறிமுகம் ஏற்படும்.

உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பத்திரம் சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும். பயண வாய்ப்புகள் மூலம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். எதிர்பாராத விரைய செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.

திருவோணம் : புரிதல் ஏற்படும்.

அவிட்டம் : நெருக்கடியான நாள்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

தம்பதிகளுக்குள் ஆரோக்கியமான வாதம் தோன்றி மறையும். வழக்கு தொடர்பான அலைச்சல் மேம்படும். பழைய நினைவுகள் மூலம் சோர்வு உண்டாகும். சஞ்சலத்தால் சில குழப்பம் ஏற்படும். பயணங்களில் பொறுமை வேண்டும். நேரத்திற்கு உணவினை சாப்பிடுவது நல்லது. எதிர்பாலின மக்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : அலைச்சல் மேம்படும்.

சதயம் : பொறுமை வேண்டும்.

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 17, 2024

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தெளிவான சிந்தனைகள் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.

ரேவதி : இலக்குகள் பிறக்கும்.

Tags

Next Story