Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

ஆகஸ்ட் 12, 2024 திங்கள்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆடி மாதம் - 27

12-08-2024 திங்கட்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் -ஆடி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - அதிகாலை 05.09 am வரை ஸப்தமி திதி பிறகு அஷ்டமி திதி

நக்ஷத்திரம் - காலை 06.39am வரை சுவாதி, பிறகு விசாகம்

யோகம் - அதிகாலை 06.03 AM வரை சித்த யோகம், காலை 06.39 am வரை அமிர்த யோகம் பிறகு நாள் முழுவதும் மரண யோகம்

நல்ல நேரம் - 06.15 AM -07.15 AM, 04.45 PM -05.45 PM

கௌரி நல்ல நேரம் 09.15 AM-10.15 AM, 07.30 PM-08.30 PM

ராகு காலம் - 07.30 AM- 09.00 AM .

எமகண்டம் - 10.30 AM- 12.00 PM.

குளிகை - 01.30 PM - 03.00 P M.

சூரிய உதயம். - காலை 05.56 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.31PM.

சந்திராஷ்டமம் - அதிகாலை 06.39 am வரை உத்திரட்டாதி, பிறகு ரேவதி

இன்றைய (12-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்களால் மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.

பரணி : விவாதங்களை தவிர்க்கவும்.

கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தன வரவுகள் சாதகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் நன்மை ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். அயல்நாடு தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் உண்டாகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : அறிமுகங்கள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், ஆதரவுகளும் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வரவுகளை மேம்படுத்த ஆலோசனைகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். கட்டிட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இறை வழிபாடு தெளிவை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பணிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரம் : ஒப்பந்தங்கள் ஏற்படும்.

உத்திரம் : ஒத்துழைப்பு உண்டாகும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

உடன்பிறந்தவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவு மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சாந்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : தடைகள் விலகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைப்பட்ட தன வரவுகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கலை துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

சுவாதி : நெருக்கடிகள் குறையும்.

விசாகம் : அறிமுகம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

நண்பர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் அமையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நன்மைகள் கிடைக்கும்.

அனுஷம் : மாற்றமான நாள்.

கேட்டை : புரிதல்கள் மேம்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : அனுபவம் ஏற்படும்.

பூராடம் : புரிதல்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சாதகமான முடிவுகள் கிடைக்கும். கோபம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அவிட்டம் : முடிவுகள் கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வெளிநாட்டு பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : லாபங்கள் மேம்படும்.

சதயம் : கட்டுப்பாடுகள் விலகும்.

பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 12, 2024

ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வாகன பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். சாமர்த்தியமான செயல்களால் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

உத்திரட்டாதி : ஆதரவான நாள்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

Tags

Next Story